பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ்பிள்ளை மரணம் | Director Rajesh Pillai dies at 41

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (27/02/2016)

கடைசி தொடர்பு:18:22 (27/02/2016)

பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ்பிள்ளை மரணம்

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜேஷ் பிள்ளை கொச்சியில் இன்று மறைந்தார். அவருக்கு வயது 42 என்பது குறிப்பிடத்தக்கது.

டிராபிக், மிலி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் ராஜேஷ் பிள்ளை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் மஞ்சுவாரியார் நடிப்பில் உருவாகிவந்த படம் வேட்ட (vettah) இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே அவருக்கு பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொச்சியிலுள்ள பிவிஎஸ் என்ற தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பினால் கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல் நலக்குறைவால் இன்று காலை சுமார் 12 மணியளவில் இயற்கை எய்தினார்.

மலையாளத்திரையுலகின் திருப்புமுனையான படங்களில் ஒன்று டிராபிக். தமிழில் சென்னையில் ஒருநாள் என்று ரீமேக் ஆன திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, இவர் கடைசியாக இயக்கிய வேட்ட திரைப்படம் வெள்ளியன்று தான் கேரளா முழுவதும் வெளியானது. இந்நிலையில், இவரின் மரணம் மலையாளத்திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Behind the scenes of Vettah...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close