விஜய், சூர்யா பாணியில் பவன் கல்யாண்!

தமிழில் முதன் முதலில் வெளியாகவிருகிறது பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படம். தமிழ் சினிமா உலகிற்கும், தெலுங்கு சினிமா உலகிற்கும் இடையே இருந்த இடைவெளி தற்போதைய காலங்களில் பெரிதும் குறைந்து கொண்டே வருகிறது என்று தான் கூற வேண்டும் 80, 90களில் தமிழ், தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருகின்றன.

இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தெலுங்குப் படங்களின் மீதும், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தமிழ்ப் படங்களின் மீதும் அவ்வளவு ஆர்வம் இருந்தாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது தெலுங்குப் படங்கள் நேரடியாகத் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணம் உள்ளன. இதற்கு தெலுங்கு உலகின் அனேக படங்கள் இங்கு ரீமேக் செய்யப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பதே காரணம். 

குறிப்பாக ரஜினியின் சந்திரமுகி, விஜய்யின் போக்கிரி போன்ற பிளாக் பஸ்டர் படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் ரீமேக் ஒருபக்கம் இருக்க, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாகவே தமிழில் டப் செய்யப்பட்டு, அங்கு வெளியாகும் அதே நாளில் இங்கும் வெளியாகும் புதிய கலாச்சரம் ஆரம்பமாகி உள்ளது. ஹிந்தி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரின் படங்கள் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தெலுங்குப் படங்களும் அதே பாணியில் இங்கு வெளியாகி வருகின்றன.

குறிப்பாக மகேஷ் பாபு, ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜீனியர் என்டிஆர் போன்ற இளைய தலைமுறையினரின் ஹீரோவாக உள்ள இவர்களின் படங்கள் பெரிதும் இங்கு வெளியாகின்றன. தற்போது இந்த வரிசையில் இணைபவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ள இவரது படம் சர்தார் கப்பர் சிங் 2. தெலுங்கு திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தினை தமிழிலும் வெளியிட முடிவு செய்துள்ளனராம் படக்குழுவினர்.

படத்தின் பாடல்கள் வரும் 20ம் தேதி ஹைதராபாதில் வெளியிட இருப்பதாக தெரிகிறது. கதை, வசனம், தயாரிப்பு என இதில் புகுந்து விளையாடி உள்ளாராம் கல்யாண். படத்தை இயக்கி இருக்கிறார் கே. எஸ். ரவீந்திரா. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் சூர்யா, விஜய், அஜித், விஷால், என இங்கே இருக்கும் நடிகர்களும் தெலுங்கில் கால் பதிக்கும் வேளையில் அங்கே இருக்கும் நடிகர்களும் தமிழில் அதீத ஈடுபாடு செலுத்தத் துவங்கியுள்ளனர். 
 

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!