“ பெண்களை முத்தமிடணும் இல்லை கர்ப்பமாக்கணும்” நடிகரின் சர்ச்சை பேச்சு!

ஹைதராபாத்தில் நடந்த ‘சாவித்ரி’ பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பாலகிருஷ்ணா, ‘என் படத்தில் பெண்கள் சும்மா வந்து போவதை என் ரசிகர்கள் விரும்புவதில்லை.ஒன்று நான் அவர்களை முத்தமிட வேண்டும் இல்லை கர்ப்பமாக்க வேண்டும் என்றார்.

இதைக் கேட்டு மேடையில் இருந்த நடிகைகள் முகம் சுளித்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரான பாலகிருஷ்ணா பெண்களை பற்றி இவ்வாறு பேசியுள்ளது பலரையும் கோபம் அடைய வைத்தது. பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக,பாலகிருஷ்ணா மீது வக்கீல்கள் சிலர் அங்குள்ள சரூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் பாலகிருஷ்ணாவும் மற்றும் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கேட்டுக்கொண்டுகொண்டார். இவரது பேச்சு சர்ச்சையை அதிகப்படுத்தவே  பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது:


''பெண்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். அனைத்து பெண்களையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த சொந்த சகோதரிகளாக பாவிப்பதே தனது குடும்பத்தின் வழக்கம். பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும் என்பது எனது ரத்ததில் ஊறியுள்ளது. அத்தகைய உணர்வு எனது தந்தை என்.டி.ஆரிடமிருந்து வந்தது. பெண்களின் மனதைக் காயப்படுத்தும் நோக்கில் தான் இவ்வாறு பேசவில்லை. திரைப்பட கதாபாத்திரங்கள் குறித்து பேசினேன் அவ்வாறு தான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும் உலக மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன் இவ்வாறு பாலகிருஷ்ணா மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!