பிச்சைக்காரன் நாயகி சாதனாவின் அடுத்த படம் | Pichaikaran Heroine goes to Telugu

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (09/03/2016)

கடைசி தொடர்பு:17:20 (09/03/2016)

பிச்சைக்காரன் நாயகி சாதனாவின் அடுத்த படம்

பிச்சைக்காரனைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் நடிகை சாதனா டைட்டஸ். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் எண்ணற்ற கதாநாயகிகளில் ஒருவர் சாதனா டைட்டஸ்.

பிச்சைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், தெலுங்குத் திரை உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழில் அவர் நடித்த முதல் படமே ஹிட்டாக, தெலுங்கில் நாரா ரோஹித் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் சாதனா. தமிழில் விஜய் ஆண்டனி மூலம் தனக்கு பெரும் வாய்ப்பு கிடைத்திருப்பதைத் தொடர்ந்து,

தெலுங்கிலும் நாரா ரோஹித் தயாரிப்பில் நடிக்க இருப்பது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். "நீதி நாதே ஒக்க காதா" என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் ஸ்ரீ விஷ்ணுவிற்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாதனா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்