அல்லு அர்ஜுனின் மனைவிக்கு இவ்வளவு செல்வாக்கா?

சமூக வலைதளங்களில் இருக்கும் நடிகர், நடிகைகள் அவ்வப்போது  படங்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என தங்களைப் பற்றிய செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நடிகரை 2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடருகின்றனர், இந்த நடிகை இவ்வளவு பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை கடந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு நடிகருக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாகவும் சமூக வலைதளங்கள் அமைகின்றன, மேலும் பிரபலங்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்து உறுப்பினர்களும் இதன் மூலம் பிரபலமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஹீரோக்களின் வாரிசுகள். ஆனால் அண்மையில் தென் இந்தியாவின் மிகப்பெரிய ஹீரோக்களுள் ஒருவரான அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்நேகா ரெட்டியை, இன்ஸ்டாக்ராமில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனராம் .

பொது நிகழ்ச்சிகளிலும் மிகவும் குறைந்த அளவே இவர் காணப்பட்டாலும், இன்ஸ்டாக்ரமில் இவர் பிரபலமடைய, அவ்வப்போது இவர் பதிவிடும் அவர்களது மகன், அல்லு அர்ஜுனின் அழகான புகைப்படங்களே அதற்குக் காரணமாம். முகநூலில் அல்லு அர்ஜுனை 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடருகின்றார். தற்போது அவரது மனைவியும் ரசிகர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளவராகத் திகழ்கிறார்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!