தெறிக்கு ட்ஃப் கொடுக்கும் தெலுங்குப்படம் | Sardar Gappar Singh Is Compitated Theri Movie?

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (21/03/2016)

கடைசி தொடர்பு:18:11 (21/03/2016)

தெறிக்கு ட்ஃப் கொடுக்கும் தெலுங்குப்படம்

சர்தார் கப்பர் சிங்

தமிழில் தெறி போலீஸ் போல தெலுங்கில் சர்தார் போலீஸும் ஏப்ரல் ரேஸுக்கு தயாராகிவிட்டது. 'சர்தார் கப்பர் சிங்' படத்தை முடித்து ஆடியோ வெளியீட்டையும் நடத்திவிட்டனர். இப்படத்துக்கு கதை திரைக்கதை பவனே எழுதியிருக்கிறார். விழாவில் பேசிய பவன் கல்யாணின் அண்ணன், சிரஞ்சீவி 'பவன் பாபுவுடைய படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சது கப்பர் சிங் தான். அதில் ஒரு எனர்ஜி இருந்தது, அதே எனர்ஜி ரெண்டாவது பாகத்திலும் இருக்கும்' எனப் பேசி முடித்தார். அதன்பின் பேசிய பவன்கல்யாண், அண்ணன் நடிக்கறதுக்கு முன்னால வரை எனக்கு அமிதாப் பச்சன் படங்கள் தான் பிடிக்கும். அதுவே அண்ணன் நடிக்க ஆரம்பிச்சதும் அவர் படங்கள் மட்டும் தான் பிடிச்சது. அப்படிப்பட்ட அண்ணன் ஒரு நாள், 'நீ ஏண்டா நடிக்கக் கூடாதுனு கேட்டார். அப்ப ஆரம்பிச்சு இப்போ ஒரு நடிகனா உங்க முன்னால நிக்கறதுக்குக் காரணம் என அண்ணனும் அண்ணியும் தான் என சென்டிமெண்டாக முடித்தார்.

ஷாரூக் இன் ஆனந்த் எல் ராய்

தனு வெட்ஸ் மனு ஹிட்டுக்குப் பிறகு, தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தி 'ராஞ்னா' மூலம் மீண்டும் ஹிட் கொடுத்து, 'தனு வெட்ஸ் மனு' இரண்டாம் பாகத்தையும் ஹிட்டடிக்க வைத்தவர் ஆனந்த் எல் ராய். பாலிவுட்டில் பெரிய ஸ்டார் யாரையும் இயக்காமல் இருந்தவர் அடுத்ததாய் இயக்கப்போவது பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானை.

சமீபத்தில் ஷாரூக்கை சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார் ஆனந்த். கதை ஷாரூக்கை மிகவும் கவர்ந்திருக்கிறது. இது ஒரு ரொமாண்டிக் படமாக இருக்கும் எனக் கூறியிருக்கும் ஆனந்த், தற்போது ஹீரோயினை முடிவு செய்யும் வேலையில் இருக்கிறார். ஃபேன் படத்தை முடித்துவிட்ட ஷாரூக் அடுத்ததாக ராயீஸ் படத்தை முடித்துவிட்டு நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

சக்ரவியூகா

தமிழில் விக்ரம் பிரபு, சுரபி நடிப்பில் எம்.சரவணன் இயக்கிய படம் 'இவன் வேற மாதிரி'. தற்போது இந்தப் படம் கன்னட மொழியில் புனித் ராஜ்குமார் நடிப்பில் ரீமேக் ஆகியிருக்கிறது. படத்தில் ஹீரோ இன்ட்ரோ பாடலை ஜூனியர் என்.டி.ஆர் பாட, புனித் ராஜ் குமாருடன் இணைந்து ஒரு டூயட் பாடலைப் பாடியிருக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்திற்குப் பிறகு தனது 25வது படமான 'டுட்மனே ஹுடுகா' படத்தை சம்மர் ரிலீஸாக வெளியிட பரபரப்பாக இருக்கிறார் புனித்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close