விஜய்யைத் தொடர்ந்து அஜித்.... கேரள சினிமாவில் என்ன நடக்கிறது? | Ajith's Aaluma Doluma song in Dulquer salman's Kali movie

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (29/03/2016)

கடைசி தொடர்பு:14:59 (29/03/2016)

விஜய்யைத் தொடர்ந்து அஜித்.... கேரள சினிமாவில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் துல்கர் சல்மான், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’கலி’ ஒரு மனிதனின் கோபம் அவனது மனைவி நண்பர்கள் கடைசியாக அவனது வாழ்க்கையை என அனைத்தையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தின் ஒரு காட்சியில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்தக் காட்சி வருகையில் கேரளா ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்களாம். இதேபோல் ப்ருத்வி ராஜ் நடிப்பில் வெளியான ‘பாவாட’ படத்தில் அவர் விஜய் ரசிகராக இருப்பது போலவும், அவருக்கு பாலாபிஷேகம் செய்வது போலவும் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாக்களில் தான் இதுபோன்ற காட்சிகள் அவ்வப்போது இடம்பெறும். இப்போது மலையாள சினிமாவிலும்  நம்மூர் நடிகர்களான அஜித், விஜய்யைக் கொண்டாடி வருவது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

 இவருக்கு இவ்வளவு சம்பளமா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close