தெறி படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்! | Theri to Release in telugu as Police OHDU

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (29/03/2016)

கடைசி தொடர்பு:16:48 (29/03/2016)

தெறி படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்!

விஜய் , சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, பிரபு, ராதிகா நடிப்பில் அட்லீ இயக்கத்தில்உருவாகியுள்ள படம் ‘தெறி’. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில் படத்தின் தெலுங்கு டைட்டில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நாளான ஏப்ரல் 14-ம்தேதி ரிலீஸாகும் இப்படத்தின் தெலுங்கு மொழி டப்பிங் ஏவி.எம் கார்டனில் தற்சமயம் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய்க்கு துப்பாக்கி, கத்தி படத்துக்கு டப்பிங் குரல் கொடுத்த வாசு தெறி படத்துக்கும் பேசி வருகிறார். ஆந்திராவில் வெளியாகும்தெலுங்கு படத்துக்கு ”போலீஸ் ஓஹ்டு” என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

மலையாளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கும் நிலையில் “தெறி” என்றால் மலையாளத்தில் கெட்ட வார்த்தை எனப்படும். எனவே படத்தின் தலைப்பு அங்கே என்னவாக இருக்கும் என்னும் கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close