ரஜினிகாந்த், சிரஞ்சீவி குறித்து ராம் கோபால் வர்மா இப்படி சொல்லலாமா?

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா சில நாட்களாக கொஞ்சம் அமைதியாக இருந்தார்... இப்போது மீண்டும் பஞ்சாயத்தை துவக்கியுள்ளார். பெண் தோழிகள் பலரும் சூழ பிறந்தநாளைக் கொண்டாடிய ராம் கோபால் வர்மா அடுத்தப் பஞ்சாயத்தாக பவன் கல்யாண் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கருத்து யாருடன் ஒப்பிட்டு என்பது தான் இங்கே விஷயமே.

நேற்று ’தி ஜங்கிள் புக்’ படத்துடன் ஒப்பிட்டு சர்தார் கப்பர் சிங் படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் ராம் கோபால் வர்மா “ சர்தார் கப்பர் சிங்கை கொலை செய்த இந்தச் சின்ன சிறுவனை சந்தியுங்கள்” என ஒரு ட்வீட்டைப் பதிவு செய்ய ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

"ஒரு அயல்நாட்டு டப்பிங் படம் நம்மூர் ஹீரோவின் படத்துடன் மோதி ஹவுஸ் ஃபுல்லாக மாறுகிறது எனில் கண்டிப்பாக பவன் கல்யாணின் ரசிகர்கள் அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும்" எனவும் அடுத்த ட்வீட்டைப் போட்டுள்ளார். ரசிகர்கள் சும்மா விடுவார்களா? ராம் கோபால் வர்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கும் அளவிற்கு கோபமாக்கியுள்ளது.

இந்நிலையில் ”உங்களைச் சுற்றியிருக்கும் ரசிகர்களை விட பல மடங்கு நானும் என் அம்மா, சகோதரன் மிகவும் உண்மையான ரசிகர்கள்” எனக் கூறியுள்ளார். அவர்களை நம்பாதீர்கள், ”என்னை பொருத்தமட்டில் உண்மையான ஒரு ரசிகனாகச் சொன்னால் நீங்கள் 10 மடங்கு சிரஞ்சீவியைக் காட்டிலும், 5 மடங்கு ரஜினிகாந்தைக் காட்டிலும் சிறந்தவர் தான்” எனக் கூற இப்போது ரஜினிகாந்த், சிரஞ்சீவி ரசிகர்களும் ட்விட்டரில் ராம் கோபால் வர்மாவை வருத்தெடுத்து வருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!