தெலுங்கு ’தெறி’க்கு பேர் ஏன் மாறுச்சு தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன், ராதிகா, ராஜேந்திரன், பேபி நைனிகா, உள்ளிட்ட பலர்  நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி வெளியான படம் தெறி. படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.

தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே இருந்த பிரச்னை காரணமாக செங்கல்பட்டு , அதன் சுற்று வட்டாரம் என சுமாராக 60 திரையரங்குகளில் தெறி வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் போலீஸ் என்னும் பெயரில் வெள்ளியன்று வெளியானது.

இப்படத்தின் டப்பிங் உரிமம் பெற்று வெளியிட்டுள்ளார் தில் ராஜு. இப்படத்திற்கு தெலுங்கில் முதலில் வைக்கப்பட்ட பெயர் போலீஸோடு. இந்தப் பெயர் போலீஸ்காரன் என்னும் பொருள் படும்படி கொஞ்சம் மரியாதை குறைவது போல் இருப்பதால் தலைப்புக்கு போலீஸ் வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இதனால் படத்திற்கு போலீஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேக்கிங் ஸ்டைலிஷ் ஆனால் எப்போதுமான போலீஸ் கதை என தெலுங்கிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது தெறி, போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!