ஸ்ரீவித்யாவுக்கு அடுத்து வித்யாபாலன் தான்! - இயக்குநர் கமல் சொல்லும் ரகசியம்!

மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வெளியாகி மெகா ஹிட் அடித்தப் படம் ‘செல்லுலாய்ட்’. ப்ருத்விராஜ் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் வரை நற்பெயர் பெற்ற படம். இப்படத்தின் இயக்குநர் கமலின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குத் தற்போது பதில் கிடைத்துள்ளது.

மலையாளத்தின் பிரபல பெண் எழுத்தாளர் மாதவிக்குட்டியின் சுயசரிதையே கமலின் அடுத்த சாய்ஸ். 1976-77 களில் எனது கல்லூரி நாட்களில் அதிகம் இடம்பிடித்தது மாதவிக்குட்டியின் எழுத்துகள் தான். என் வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்றால் மாதவிக்குட்டியின் புத்தகங்கள் தான் என நெகிழும் இயக்குநர் கமலுக்கு மாதவிக்குட்டியின் வாழ்க்கையை படமாக எடுப்பதில் அவ்வளவு சிக்கல்கள் இருந்தனவாம். அவரது வாழ்க்கையையும் , குணத்தையும் புரிந்துக்கொள்ளவே எனக்கு நீண்டகாலம் பிடித்தது என்னும் கமல் படத்தின் நாயகியாக வித்யாபாலனை தேர்வு செய்துள்ளார்.

ஏன் வித்யாபாலன் என்ற கேள்விக்கு, உண்மையின் இந்தக் கதைக்கு சரியான தேர்வு என்றால் ஸ்ரீவித்யா தான். மாதவிக்குட்டியுடன் பல நாட்கள் தனது நட்பைப் பகிர்ந்துகொண்ட நடிகை. மேலும் அவரது கேரக்டரை அப்படியே உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரோடு இல்லை. ஸ்ரீவித்யா போலவே வித்தியாசமான நடிப்பு, தெளிவான  கதைகள் தேர்வு செய்வது  என்றிருப்பது  நடிகை வித்யாபாலன் தான்.

வித்யாபாலன் மலையாளி என்பதால் மட்டும் நான் அவரைத் தேர்வு செய்யவில்லை. என் கதையை சரியாக உணர்ந்து நடிக்கும் நடிகை என்பதாலேயே வித்யாபாலன். அவருக்கும் கதை சொன்னேன். கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டார். படம் செப்டம்பர் 20ல் துவக்கம். 2017ல் ரிலீஸ் என மலையாள தளம் ஒன்றில்  அறிவித்துள்ளார் ‘செல்லுலாய்டு’ இயக்குநர் கமல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!