சமந்தா - நாக சைதன்யாவிற்கு விரைவில் திருமணம்?!

தெலுங்கின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். யார் மணப்பெண் என்பதை நாகர்ஜுனா ரகசியமாக வைத்துள்ளார்.

தமிழில், தமன்னாவுடன் இவர் நடித்த “தோழா” படம் பெரும் வரவேற்பைப்  பெற்றது குறிப்பிடத்தக்கது. இது குறித்து  நாகர்ஜுனா கூறும்போது, “ நாக சைதன்யா ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரைக் குறித்து நானும், என் மனைவி அமலாவும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனின் இந்த அறிவிப்பு திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாகர்ஜுனா குறிப்பிடுவது நடிகை சமந்தா என்று கூறப்படுகிறது. ஏனெனில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நெருங்கிய நட்புடன் பழகியவர்கள். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா”மற்றும் “மனம்” என்று இரண்டு ஹிட் படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அந்த சமயத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்ததாக பல செய்திகள் பரவின. ஆனால் இதுகுறித்து இரண்டு பேருமே எந்தக்  கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நிவின்பாலி நடித்து ஹிட்டான மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நாக சைதன்யா நடித்துவருக்கிறார். மேலும் தற்போது புதிய படம் எதிலும்  ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார் நடிகை சமந்தா. இது தவிர, ட்விட்டரில், “ மன்னிக்கவும், சின்ன பிரச்னையின் காரணமாக என்னால் சிக்காகோ நிகழ்சியில் கலந்துகொள்ளமுடியாது” என்றும் சமந்தா பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாகர்ஜுனா குறிப்பிட்டுள்ளதால் நாக சைதன்யா -சமந்தா காதல், திருமணத்தில் முடியவிருப்பது தெரிகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று நாகர்ஜுனாவின் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!