'பத்ரா' வீசப்பட்ட சம்பவம்:கொதித்தெழுந்த த்ரிஷா!

 
 
மாடியில் இருந்து 'பத்ரா' நாயைத் தூக்கி வீசி கொல்ல முயன்ற மருத்துவ மாணவர்களின் மெடிக்கல் சீட் அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்று நடிகை த்ரிஷா தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
கடந்த திங்கட்கிழமை, இளைஞர் ஒருவர் 'பத்ரா' நாயை வீட்டின் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசினார். அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என பின்னர் தெரியவந்தது. புகாரின் பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
 
இந்தச்  சம்பவதையடுத்து பிரபல ஆர்.ஜே. வான பாலாஜி, 'மாதா மெடிக்கல் கல்லூரி தலைமைக்கு.. அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள்..மக்களின் கோபத்தை புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் மருத்துவர்களாவதைத்  தடுத்து, மனிதநேயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டார்.
 
இதற்கு பதில் ட்விட்டாக செல்லப்பிராணிகள் மேல் அதிகம் பிரியம் கொண்ட நடிகை திரிஷா 'இந்தச்  செயலை செய்த இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மெடிக்கல் சீட் அனுமதியை  ரத்து செய்ய வேண்டும் என ட்விட்டரில் கொதித்துள்ளார்.

-வே. கிருஷ்ணவேணி  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!