பாதி ரெடி! சபாஷ் நாயுடு படம் பற்றி சொல்லும் கமல்! | Sabash Naidu Half Film is ready

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (08/07/2016)

கடைசி தொடர்பு:20:10 (08/07/2016)

பாதி ரெடி! சபாஷ் நாயுடு படம் பற்றி சொல்லும் கமல்!

கடந்த மாதம் 6ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்புடன் தொடங்கியது கமலின் 'சபாஷ் நாயுடு'. தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வெளிநாட்டு போர்ஷனுக்கான ஷூட்டிங் முடிந்த நிலையில்,தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ள கமல் டீம், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரைக்குமான 'போஸ்ட் புரொடக்ஷன்' வேலைகளையும்  விரைவாக முடித்திருக்கிறது. 
 
தமிழ், தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’ எனவும், ஹிந்தியில் ‘சபாஷ் குண்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 42 நிமிட காட்சிகளும், ஸ்ருதிஹாசன் பங்குபெற்ற பாடல் ஒன்றும் எடிட் செய்யப்பட்டுவிட்டதாக கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டி.கே.ராஜீவ்குமாருக்குப் பதிலாக கமலே இயக்கி, அவரே நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மனு நாராயணன், பிரம்மானந்தம் (தமிழ், தெலுங்கு), சௌரப் சுக்லா (ஹிந்தி) உட்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் சபாஷ் நாயுடுவுக்கு, ஜெய கிருஷ்ணா கம்மாடி ஒளிப்பதிவு செய்கிறார்.
 
-வே.கிருஷ்ணவேணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close