வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (12/07/2016)

கடைசி தொடர்பு:17:30 (12/07/2016)

மீண்டும் ரஜினி, கமல் படங்களில் ரம்யா கிருஷ்ணண்:அடுத்த ரவுண்ட் ஆரம்பம்!

 
ரஜினி,கமல் ஆகியோர் படங்களில் மீண்டும் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்து தனது அடுத்த ரவுண்டை தமிழ்ப்படங்களில் ஆரம்பித்துள்ளார்.
 
'கபாலி' ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் நடித்து வரும் ரஜினி குறித்து வதந்தி பரவியது. அதையடுத்து ரஜினி நலமாக உள்ளார். விரைவில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவார் என்கிற விளக்கமும் ரஜினி தரப்பில் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை வரும் ரஜினியுடன் 2.0 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.    
 
ஏற்கெனவே,ரஜினிகாந்துடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படையப்பா 1999 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதே போல் கமலுடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் கடந்த 2002 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.  இந்த இரண்டு படமும் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய பெயரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.
 
மீண்டும் இந்த இரண்டு பெரிய ஹீரோக்களுடனும் அவர் இணைகிறார். ரஜினியுடன் 2.0 படத்திலும், கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் மனைவியாகவும் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்