'அப்பா' படம் பார்க்க பாஸ் வழங்கிய பள்ளி: நன்றி சொல்லும் இயக்குநர் சீனு ராமசாமி! | Gopipalayam school issued movie pass to their students to watch Appa movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (12/07/2016)

கடைசி தொடர்பு:17:29 (12/07/2016)

'அப்பா' படம் பார்க்க பாஸ் வழங்கிய பள்ளி: நன்றி சொல்லும் இயக்குநர் சீனு ராமசாமி!

 
சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தை  மக்கள் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர்கள் பலரும் இந்த படத்தைப்  புகழ்ந்து தள்ளியுள்ளனர். அப்பா, மகன்-மகளின் புரிதல் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன விஷயங்களை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என பல விஷயங்களைப்  பாடமாக்கியிருக்கிறது 'அப்பா' படம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குநர்கள் பலர் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் சீனு ராமசாமியும் ஒருவர். 
 
இது எல்லோருக்கும் தெரிந்த செய்தியே. ஆனால் புதிய செய்தி இதுதான். அது, இன்று(செவ்வாய்) தனது முகநூலில் இயக்குநர் சீனு ராமசாமி, கோபிப்பாளையத்தில் உள்ள தூய திரேசாள் முதனிலைப் பள்ளி யைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். காரணம் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் 'அப்பா' படம் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் பார்க்கவேண்டும் என்றும் அதற்கான சலுகைக் கட்டண பாஸ் வழங்கியுள்ளது. 
 
இந்தப் பள்ளியைப்  பாராட்டியதோடு, நன்றியும் கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close