தமிழின் முதல் குழந்தை நட்சத்திரம் - பேபி சரோஜா | Tamil film first child artist- baby saroja

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (14/07/2016)

கடைசி தொடர்பு:16:09 (14/07/2016)

தமிழின் முதல் குழந்தை நட்சத்திரம் - பேபி சரோஜா

1937 ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசுப்ரமணியம் இயக்கிய 'பாலயோகினி' எனும் குழந்தைகளை மையமாகக் கொண்ட படத்தில் நடித்தவர் பேபி சரோஜா. இந்தப் படத்திற்குப் பிறகு மிகவும் பிரபலம் ஆக ஆரம்பித்தார் பேபி சரோஜா. பின்னாளில் இவரை சரோஜா தேவி என்று பலரும் நினைத்தனர். ஆனால், இவர் சரோஜா தேவி அல்ல. இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் மகள்தான் இந்த பேபி சரோஜா.
 
இவரின் படம் வெளியானதும், அப்போது குழந்தைகள் பயன்படுத்தும் சோப்பு முதல் நோட்டுப் புத்தகங்கள் வரை அனைத்திலும் பேபி சரோஜாவின் படத்தைப்  பதித்து விளம்பரத்தின் வாயிலாக லாபத்தை அள்ளி இருக்கிறார்கள் . அப்போது மிகவும் பிரபலமாக இருந்த காதர் இஸ்மாயில் அண்ட் கம்பெனி வெளிநாடுகளில் இருந்து சோப்பு இறக்குமதி செய்து அதில் பேபி சரோஜா படத்தினை வைத்து லாபம் அதிகம் பெற முயற்சித்தது.
 
ஆனால் அது இந்திய விடுதலைப் போராட்ட காலம் என்பதால் அந்நியப்பொருட்களை வாங்குவதில்லை என்று மக்கள் புறக்கணித்தனர். பேபி சரோஜாவும் புறக்கணித்து, தனது எதிர்ப்பையும் வலுவாகப் பதிவு செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close