வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (15/07/2016)

கடைசி தொடர்பு:15:30 (15/07/2016)

தமிழை நேசிக்கும் கவிஞன் நேர்மையானவன்!

கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளையும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்.  இந்த முறை அவரின் பிறந்த நாளையொட்டி மதுரையில் 'வெற்றி தமிழர் பேரவை சார்பில் விழா நடத்தப்பட்டு கவிஞர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். 
 
இந்த விழாவில் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
விழாவில் பேசிய வைரமுத்து, 'இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. மது,புகைய இன்று முதல் தொட மாட்டேன் என இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். தமிழை விதைத்தால் பண்பாட்டை அறுவடை செய்யலாம். தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில், தமிழ் மொழியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். கைத்தட்டல் தான் ஒரு கவிஞனுக்கு சுவாசம். தமிழை நேசிக்கும் கவிஞன் நேர்மையானவன், அவன் யாருக்கும் அடிமை ஆகாதவன். 
 
வைரமுத்துவை அடுத்து பேசிய பாரதிராஜா, 'வைரமுத்து இலக்கியங்களை படித்தவர். அவர் எழுதிய பாடல்களை திருத்தித் தரச்சொல்லி இதுவரை நான் அவரிடம் கேட்டதே இல்லை. 'என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்