கின்னஸில் இடம்பிடித்தார் 'சபாஷ் நாயுடு' பிரம்மானந்தம்!

'மொழி' படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பைக்  காட்டி தமிழ் ரசிகர்களைக் குலுங்கி குலுங்கிச் சிரிக்கவைத்தவர் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.
 
தெலுங்கு திரையுலகின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் பிரம்மானந்தம், தெலுங்கு திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் 1000 மேற்பட்ட படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர்.  இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சிவிலியன் போன்ற விருதுகளை ஏற்கெனவே  பெற்றிருக்கிறார். .இந்நிலையில் அதிக படங்களில் நடித்ததற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளார். 
 
அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது கமல் ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சபாஷ் நாயுடு 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரில் கமலஹாசன் பைக்கில் பின்னால் உட்கார்ந்திருப்பவரும் இவர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!