செல்ஃபி எடுக்க 6 அடி உயர ரஜினி படம்: 'கபாலி'யை வரவேற்கும் கோவை கஃபே

 
 
கபாலி ஃபீவர் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. திருப்பூரில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் ரஜினிகாந்த் ஃபேன்ஸ் பலர், அவருக்கு ஃபேவரெட்டான வேஷ்டியை ஒரேமாதிரி ஆர்டர் செய்துள்ளனர். இந்த வேஷ்டிகளில் ரெட், ப்ளூ போன்ற வண்ணங்களில் பார்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 22 ம் தேதி கோவையில் உள்ள முக்கிய கோயில்களில் ரஜினிக்காக அவரின் ரசிகர்கள் சிறப்பு பிராத்தனைகள் செய்யவிருக்கின்றனர். 
 
கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ளது கோலிவுட் கஃபே காஃபி ஷாப். இந்த காஃபி ஷாப்பின் உரிமையாளர் ஹரிஹரன் அந்த கடையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார். ரஜினி நடித்திருந்த படங்களின் முக்கிய வசனங்களை சுவர்களில் எழுதி வைத்துள்ளார். ரஜினி தொடர்பான வசனங்கள், வார்த்தைகளை வைத்து பசில் விளையாட்டுக்கள், ஆறு அடி உயரத்திற்கு இருக்கும் ரஜினியின் படத்திற்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். 
 
இது குறித்துப் பேசிய ஹரிஹரன், 'கபாலி  வெளியாகும் ஜூலை 22 ம் தேதிக்காகக் காத்திருக்கிறோம். இந்த கோலிவுட் கஃபேயில் பசில் விளையாடுபவர்களுக்கு கிஃப்ட் கொடுக்கிறோம். சாப்பிடும் டேபிள் மேல் போடப்பட்டுள்ள ஷீட்டில் ரஜினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும். சுவர்களில் ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளில் அவர் பேசிய வசனங்களை எழுதி வைத்துள்ளோம்." என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!