'மை ஸ்டோரி' சொல்ல வருகிறார்கள் பிருத்விராஜ்-பார்வதி! | Prithviraj and Parvathy join hands for My Story

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (16/07/2016)

கடைசி தொடர்பு:14:42 (16/07/2016)

'மை ஸ்டோரி' சொல்ல வருகிறார்கள் பிருத்விராஜ்-பார்வதி!

 
பிருத்விராஜ்,  பார்வதியுடன்  இணைந்து நடிக்கும் 'My Story' படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிருத்விராஜ் மற்றும் பார்வதி இருவரின் கூட்டணியில் 'என்னு நிண்டே மொய்தீன்' படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்தப்  படம் பல விருதுகளையும் குவித்தது என்பது கூடுதல் ஸ்பெஷல்.
 
'மை ஸ்டோரி' படத்தில் ஜெய்-தாரா என்கிற பெயரில் ஜோடியாக இணைகிறார்கள். இப்படத்தின் இயக்குநர் ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குநர். இந்தப்  படத்தை 55 நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார்கள். 
 
காதலை மையமாகக்  கொண்டு எடுக்கப்படும் இந்தப்  படம் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான். 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close