மாத்தி யோசிக்கும் பார்த்திபனுக்கு அமெரிக்க விருது

சினிமாத்துறை விருதுகளால் குளித்து முடித்திருக்கிறது. பிரான்சு நாட்டின் செவாலியே விருதை பெற்று பாராட்டுமழையில் நனைந்துகொண்டிருக்கிறார் கமலஹாசன். கமலஹாசனுக்கு விருது கிடைத்த பரபரப்பில் அமெரிக்க அமைப்பிடமிருந்து தனது சினிமா சாதனைக்காக விருது பெற்றிருக்கும் பார்த்திபனை கொஞ்சம் மறந்துவிட்டோம்.

பார்த்திபன் மனிதநேயவாதி. திரைத்துறையில் எதையும் மாத்தியோசிக்கும் மனிதர். சென்னை நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருந்தபோது வெள்ளத்தை மீறிய தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்திய நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர். மனிதநேயமன்றத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்வி மருத்துவம் என பல வழிகளில் உதவி வருபவர். மனிதர்களில் நடிகர்கள் பலர் இருப்பர். ஆனால் நடிகர்களில் மனிதர்களாக இருக்கும் வெகுசிலரில் அவர் ஒருவர்.

அவருக்கு கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கிவரும் Rocheston Accreditation Institute என்ற அமைப்பு, அவரது சினிமா சாதனையை பாராட்டி 'Distinguished director' என்ற விருதினை வழங்கியிருக்கிறது. பார்த்திபனின் சினிமா படைப்புகளை வெகுவாக பாராட்டி மிக நீண்ட பாராட்டுரையுடன் இந்த பெருமையை அவருக்கு அளித்துள்ளது அந்த அமைப்பு. விருது பட்டயம் தங்கமுலாம் பூசப்பட்ட சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க எதையும் வித்தியாசமாக செய்வதில் ஆர்வம் கொண்ட பார்த்திபன் தனக்கு விருது வழங்கப்பட்ட தகவலையும், அவ்வாறே வெளிப்படுத்தியிருக்கிறார். தான் விருது பெற்ற தகவலை 'ஏழைக்கேத்த எள்ளுருண்டை !' என்ற தலைப்பில் தனது முகநுாலில் குறிப்பிட்ட அவர், அதில் சமீபத்தில் செவாலியே விருது பெற்ற கமலஹாசனுக்கு பாராட்டுப்பத்திரம் வாசித்து பதிவு இட்டிருக்கிறார். அந்த பதிவு இதோ...

“அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய CHEVALIER கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி Chevalier-ஐ வழங்கலாம்.

அவர் பேசும்போது KB சார் "அவன் 8th Std கூட complete பண்ணல ஆனா அவனுடைய English-ஐ புரிஞ்சுக்க எனக்கே dictionary தேவைப்படுது" -என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது.

கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை திரு. கமல்ஹாசன் அவர்கள்!

விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுணர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன!

ஒரு விருதே விருது பெறுகிறதே...!

- எஸ்.கிருபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!