தமிழ் சினிமால இந்த சீன்களை எல்லாம் கிராஃபிக்ஸ் இல்லாம பார்த்திருக்கீங்களா?

ஹாலிவுட் சினிமாவை ஆவென கொசு உள்ளே போய் குடும்பம் நடத்தும் அளவிற்கு வாயைப் பிளந்து பார்த்ததெல்லாம் ஒரு காலம். இப்போது அதே ஹாலிவுட் கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, நம் ஊர் திறமைசாலிகளின் பங்களிப்போடு கிராஃபிக்ஸ் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறது தமிழ் சினிமா. அப்படி நம்மை வாய் பிளக்கவைத்த சில காட்சிகளின் Before - After வெர்ஷன்தான் இது.

(படத்தில் இடம்பெற்ற காட்சிகளை கீழே கொடுத்திருக்கிறோம். அதை க்ளிக் செய்தால் கிராஃபிக்ஸ் இல்லாத நிஜக் காட்சிகளை தரிசனம் செய்யலாம்) 

Click or Touch the image

காஷ்மோரா :

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் மிரட்டல். ராஜ்நாயக் வரும் போர்ஷன் முழுக்க உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் படக்குழுவினர். காஸ்ட்யூம், மேக்கப் என எல்லாம் சரிவிகிதத்தில் அமைய, அந்தக் காட்சிகளில் ரிச் லுக் தெறிக்கிறது.

எந்திரன் :

தமிழ் சினிமா ரசிகனுக்கு வி.எஃப்.எக்ஸ் பற்றிய அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்த படம். ஷங்கரின் கனவுப்படம். சுஜாதாவின் கைவண்ணத்தில் செம்மையாக, அதை மேலும் அழகாக்கினார்கள் தொழில்நுட்பக் குழுவினர். இளம் இயக்குநர்களுக்கு இந்தப் படம் ஒரு பாலபாடம்.

இரண்டாம் உலகம் :

செல்வராகவனின் பேன்டஸி மேஜிகல் உலகம். படத்துக்கு வரவேற்பு பெரிதாக இல்லையென்றாலும் மேக்கிங் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. மஞ்சள், பச்சை, பிங்க் என வொண்டர்லேண்டைக் கண்முன் கொண்டுவந்த சினிமா.

விஸ்வரூபம் :

உலக நாயகனின் 'உலக' சினிமா. சென்னைக்கு வெளியே செட் போட்டு ஆப்கானிஸ்தானின் புழுதி படர்ந்த மணற்பிரதேசத்தையும் அமெரிக்காவின் பளபள கட்டடங்களையும் கண் முன் கொண்டுவந்தது படக்குழு. நடுநடுவே வரும் தத்ரூப ஆக்‌ஷன் காட்சிகள் வி.எஃப்.எக்ஸ் குழுவின் செஞ்சுரி ஆட்டம்.

புலி :

இளைய தளபதியின் முதல் பேன்டஸி சினிமா. கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக பாராட்டுகளைக் குவித்த படம். கோட்டை, சூனியக்காரி, ஒற்றைக்கண் ராட்சஷன் என சின்ன வயதுக் கதைகளை கண்முன் கொண்டுவந்த படம்.

24 :

இந்த ஆண்டின் பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்‌ஷன். காலத்தை வெல்லும் இளைஞனைக் கண்ணில் காண்பிக்க அசாத்திய உழைப்பைக் கொட்டினார்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள். முன்னும் பின்னும் ஊஞ்சலாடும் கதையை இறுக்கிப் பிடித்த கயிறு இவர்கள்தான்.

தெறி :

சென்னையின் முக்கிய இடங்கள்தான் கதைக்களம். ஆனால் அந்த இடங்களில் ஷூட்டிங் செய்ய எக்கச்சக்க நடைமுறைச் சிக்கல்கள். கைகொடுக்க வந்தது சி.ஜி டீம். பிராட்வே, நேப்பியர் பாலம் என சென்னையை தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தினார்கள்.

பாகுபலி :

இந்திய சினிமாவின் பிரமாண்டம். முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ்கள் கொண்டு நம்மை மிரட்டிய படம். அரண்மனைகள், கொட்டும் அருவிகள், ரத்தக்களறியான போர்க்களக் காட்சிகள் என ஹாலிவுட்டைத் தோளோடு தோள் உரசிய சினிமா. இதோ அடுத்த பாகத்தோடு சீக்கிரமே வர இருக்கிறார்கள்.

 

- நித்திஷ்

 

 

 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!