வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (01/03/2017)

கடைசி தொடர்பு:20:20 (01/03/2017)

இளையராஜாவுக்கு ‘நந்தி’ விருது... நானி, பிரபாஸ் சிறந்த நடிகர்கள்!

தெலுங்கில் வெளியாகும் படங்களை கௌரவிக்கும் விதமாக ஆந்திர மாநில அரசால் 1964-ல் இருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நந்தி விருதுகள். 2011-க்குப் பிறகு ஆந்திரா, தெலுங்கானா பிரச்னையால் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அந்த விருதுகளை அறிவித்திருக்கிறது ஆந்திர அரசு. முதல் கட்டமாக 2012 மற்றும் 2013-ம் வருடங்களுக்கான விருதுகளை அறிவித்திருக்கிறது. விருது வென்ற பிரபலங்கள் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

2012-ம் ஆண்டுக்கான விருதுகள் வரிசையில், ‘எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு’ படத்தில் இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், அதில் நடித்த நானிக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ‘ஈகா’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்கான விருதுகள் பிரிவில், ‘மிர்ச்சி’ சிறந்த படமாகவும், அதில் நடித்த பிரபாஸ் சிறந்த நடிகராகவும் தேர்வாகி உள்ளனர். விருது பெற்றவர்கள் முழு விவரம் இங்கே...

நந்தி விருதுகள்

2012க்கான நந்தி விருதுகள்:

 

வ.எண் பட்டியல் வெற்றியாளர்கள் படங்கள்
1 சிறந்த படம் ஈகா  
2 2வது சிறந்த படம் மினுகுருலு  
3 3வது சிறந்த படம் மிதுனம்  
4 சிறந்த பாப்புலர் படம் ஜுலாயி  
5 சிறந்த குடும்ப திரைப்படம் இஷ்க் அடலே ரொமன்ஸ்கி
6 சிறந்த நடிகர் நானி எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு
7 சிறந்த நடிகை சமந்தா எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு
8 சிறந்த வில்லன் சுதீப் ஈகா
9 சிறந்த நகைச்சுவை நடிகர் ராகு பாபு ஓனமாலு
10 சிறந்த துணை நடிகர் அஜய் இஷ்க்
11 சிறந்த துணை நடிகை ஷயாமலா தேவி வீரங்கம்
12 குணச்சித்திர நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மினுகுருலு
13 சிறந்த குழந்தை நடிகர் தீபக் சரோஜ் மினுகுருலு
14 சிறந்த குழந்தை நடிகை ருஷினி மினுகுருலு
15 சிறந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஈகா
16 சிறந்த அறிமுக இயக்குநர் அயோத்ய குமார் மினுகுருலு
17 சிறந்த திரைக்கதை எஸ் எஸ் ராஜமெளலி ஈகா
18 சிறந்த கதை அயோத்யகுமார் மினுகுருலு
19 சிறந்த வசனகர்த்தா தனிக்கெல்லா பரணி மிதுனம்
20 சிறந்த ஒளிப்பதிவு செந்தில் குமார் ஈகா
21 சிறந்த எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் ஈகா
22 சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா, கீரவாணி எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு, ஈகா
23 சிறந்த பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு
24 சிறந்த பாடகர் சங்கர் மகாதேவன் ஸ்ரீரிடி சாய்
25 சிறந்த பாடகி கீதா மதூரி குட் மார்னிங்
26 சிறந்த நடன இயக்குநர் ஜானி ஜுலாயி

 

2013க்கான நந்தி விருதுகள் :

 

வ.எண் பட்டியல் படங்கள் வெற்றியாளர்கள்
1 சிறந்த படம் மிர்ச்சி  
2 2வது சிறந்த படம் நா பங்காரு தள்ளி  
3 3வது சிறந்த படம் உய்யாலா ஜம்பாலா  
4 சிறந்த பாப்புலர் படம் அத்தாரின்டிகி தாரேதி  
5 சிறந்த குடும்ப திரைப்படம் சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு  
6 சிறந்த நடிகர் பிரபாஸ் மிர்ச்சி
7 சிறந்த நடிகை அஞ்சலி பாடில் நா பங்காரு தள்ளி
8 சிறந்த வில்லன் சம்பத் மிர்ச்சி
9 சிறந்த நகைச்சுவை நடிகர் தாகுபோது ரமேஷ் வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்
10 சிறந்த துணை நடிகர் பிரகாஷ் ராஜ் சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு
11 சிறந்த துணை நடிகை நதியா அத்தாரின்டிகி தாரேதி
12 குணச்சித்திர நடிகர் நரேஷ் பரம்பரா
13 சிறந்த குழந்தை நடிகர் விஜய சிம்ஹா ரெட்டி பக்தா சிரியாளா
14 சிறந்த குழந்தை நடிகை பிரனவி உய்யாலா ஜம்பாலா
15 சிறந்த இயக்குநர் தயா கொடவங்கன்டி அலியாஸ் ஜானகி
16 சிறந்த அறிமுக இயக்குநர் கொரட்டல சிவா மிர்ச்சி
17 சிறந்த திரைக்கதை மெர்லபக்கா காந்தி வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்
18 சிறந்த கதை மோகன்கிருஷ்ணா இந்திராகாந்தி அந்தக்கமுந்து ஆ தரவாத்தா
19 சிறந்த வசனகர்த்தா திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் அத்தாரின்டிகி தாரேதி
20 சிறந்த ஒளிப்பதிவு முரளி மோகன் ரெட்டி கமலாதோ நா பிரயானம்
21 சிறந்த எடிட்டர் பிரவீன் புடி காலிச்சரண்
22 சிறந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அத்தாரின்டிகி தாரேதி
23 சிறந்த பாடலாசிரியர் சிரி வென்னல சீத்தாராம சாஸ்த்ரி சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு
24 சிறந்த பாடகர் கைலாஷ் கர் மிர்ச்சி
25 சிறந்த பாடகி கல்பனா - இன்டின்டி அண்ணமாயா
26 சிறந்த நடன இயக்குநர் சேகர் ஜுலாயி

-முத்து பகவத்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்