Published:Updated:

``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..!" - ரைசா `வர்மா' ஷேரிங்ஸ் #VikatanExclusive

``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..!" - ரைசா `வர்மா' ஷேரிங்ஸ் #VikatanExclusive
``டீச்சர் பாலா, `கூல்' துருவ், யுவன் மகள்..!" - ரைசா `வர்மா' ஷேரிங்ஸ் #VikatanExclusive

`பியார் பிரேமா காதல்', `வர்மா' ஆகிய படங்களில் நடித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், நடிகை ரைசா.

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் `அட போங்கப்பா' வசனம் மூலம் பாப்புலர் ஆனவர், ரைசா. நிகழ்ச்சி முடித்த சூட்டோடு பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக `பியார் பிரேமா காதல்' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது, பாலாவின் `வர்மா' படத்தில் நடித்திருக்கிறார். ரைசாவிடம் பேசினேன்.  

`` `வர்மா' படத்தில் நடித்த அனுபவம்?"  

``பாலா சார் டீம்ல இருந்து போன் வந்ததும், எனக்கு செம ஷாக்கிங். `வர்மா' படத்துல ஒரு முக்கிய கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னாங்க. பாலா சார் படமாச்சே, உடனே ஓகே சொல்லிட்டேன். ஷூட்டிங் முதல்நாள் ரொம்பப் பதற்றமாவும் பயமாவும் இருந்தது. அவரைப் பத்தி நான் சொல்லிதான் தெரியணும்னு இல்லை. ரொம்ப டெடிகேஷனான நபர். ஸ்பாட்ல அவர் மட்டுமல்ல எல்லோருமே அவங்கவங்க வேலையை மெனக்கெட்டு பண்ணுவாங்க. அவரைச் சுத்தி இருக்கிற எல்லோரும் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பார். நான் இப்போதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். உடனே பாலா சார் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே சந்தோசம்." 

``துருவ் எப்படி இருக்கார்?" 

``சூப்பரா இருக்கார். ரொம்பவே கூலான நபர். ஆனா, கேமரா முன்னாடி கலக்கிடுவார். அவர் ஃபாரின்ல படிச்சதுனால அவர்கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருக்கு. நாங்க ரெண்டுபேரும்தான் ஸ்பாட்ல பேசிக்கிட்டு இருப்போம். அவர்கிட்ட கொஞ்சநேரம் பேசினாலே நம்மளையும் அவரைமாதிரி ச்சில் பண்ணிடுவார்." 

``பாலா ரொம்பவே ஸ்டிரிக்ட் இயக்குநர்னு சொல்வாங்க.. உங்களுக்கு எப்படி இருந்தது அவருடன் வொர்க் பண்ண அனுவம்?"

``ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பப் பரபரப்பா இருக்கும். மத்தவங்ககிட்ட ரிலாக்ஸா பேசக்கூட நேரம் இருக்காது. பிரேக்லதான் நானும் துருவ்வும் பேசிக்குவோம். ஆக்‌ஷன், கட்னு அடுத்தடுத்து வேகமாப் போய்க்கிட்டே இருக்கும். நான் பாலா சாரை ஒரு ஆசிரியராப் பார்க்கிறேன். அவர் என்ன சொல்றாரோ அதைச் சரியாப் பண்ணாலே போதும். மத்தபடி, அவர் ஸ்டிரிக்ட்னு சொல்லமுடியாது. ரொம்ப புரொஃபெஷனல். எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைக்கிற இயக்குநர். ஸ்பாட்ல எனக்கான காட்சிகள் முடிஞ்சாலும், பாலா சார் வேலை வாங்குறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். அது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அவர் படத்துல வொர்க் பண்ணது மறக்கமுடியாத அனுபவம். " 

``ஹரிஷ் கல்யாணுடன் நடிச்ச `பியார் பிரேமா காதல்' பட அனுபவம்?"  

``பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என் முதல் படம். அதனாலேயே, என் மனசுக்கு நெருக்கமான படம் ஆகிடுச்சு. ஹரிஷ் என் பெஸ்ட் ஃப்ரெண்டு. அதனால, ஈஸியா இருந்தது. தயாரிப்பாளர் யுவன் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் குடும்பத்தோட அடிக்கடி வருவார். யுவன் சாரோட மனைவிதான், இந்தப் படத்துக்காக எனக்கு ஸ்டைலிங் பண்ணாங்க. ரெண்டுபேரும் ரொம்ப குளோஸ் ஆயிட்டோம். யுவன் சார் பொண்ணுகூட கேம் விளையாடுவேன். ரொம்ப ஜாலியா இருக்கும், ஷூட்டிங் ஸ்பாட்."

``பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போ பார்க்கிறீங்களா... உள்ளே இருக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?"

``தினமும் பார்க்க நேரம் கிடைக்கலை. அப்பப்போ வர்ற கிளிப்பிங்ஸ், புரோமோ மட்டும் பார்ப்பேன். உள்ளே யாரெல்லாம் இருக்காங்கனு தெரியும். ஆனா, என்ன நடந்துக்கிட்டு இருக்குனு தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறவங்களுக்கு நான் சொல்ற ஒரே விஷயம், `ஜாலியா இருக்க முயற்சி பண்ணுங்க. ஜாலியா இருங்க'. நாங்க அப்படித்தான் இருந்தோம். சின்னச் சின்ன விஷயங்களுக்காகச் சண்டைகள் வரும். அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு கடந்து போயிடணும்."

``நாடு நாடா சுத்தி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்ல அப்லோடு பண்றீங்களே...?!"   

``எனக்கு ஒரே இடத்துல இருக்கப் பிடிக்காது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்கேயாவது டிராவல் பண்ணிக்கிட்டு இருப்பேன். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா `பியார் பிரேமா காதல்' டீமோட அஜர்பைஜான் நாட்டுக்குப் போனேன். போற இடத்துல எல்லாம் பாப்புலரான உணவு எதுனு விசாரிச்சு, தேடிப்போய் சாப்பிடுவேன். என்கூட வந்தவங்க எல்லோரும் இந்தியன் ரெஸ்டாரன்ட் எங்கே இருக்குனு தேடிப் போவாங்க. நான் அந்த ஊர் சாப்பாடு சாப்பிடக் கிளம்பிடுவேன். நான் காணாமப் போயிட்டேன்னு தேடிய சம்பவமும் நடந்திருக்கு. அடுத்து எந்த நாட்டுக்குப் போகலாம்னு நீங்க ஏதாவது ஐடியா கொடுங்களேன்.!" கண்சிமிட்டி சிரிக்கிறார், ரைசா. 


 

அடுத்த கட்டுரைக்கு