Published:Updated:

``பொன்ராமின் முதல் பட பட்ஜெட், `சீமராஜா'வுக்கான செட் செலவு!" - `சீமராஜா' முத்துராஜ் ஸ்பெஷல்! #VikatanExclusive

``பொன்ராமின் முதல் பட பட்ஜெட், `சீமராஜா'வுக்கான செட் செலவு!" - `சீமராஜா' முத்துராஜ் ஸ்பெஷல்! #VikatanExclusive

'சீமராஜா' படத்தின் 'செட்' சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அப்படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ்.

``பொன்ராமின் முதல் பட பட்ஜெட், `சீமராஜா'வுக்கான செட் செலவு!" - `சீமராஜா' முத்துராஜ் ஸ்பெஷல்! #VikatanExclusive

'சீமராஜா' படத்தின் 'செட்' சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்கிறார், அப்படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ்.

Published:Updated:
``பொன்ராமின் முதல் பட பட்ஜெட், `சீமராஜா'வுக்கான செட் செலவு!" - `சீமராஜா' முத்துராஜ் ஸ்பெஷல்! #VikatanExclusive

`வேலைக்காரன்' படத்தில் முத்துராஜின் கலை இயக்கம் பலராலும் பாராட்டப்பட்டது. அதைவிடப் பிரமாண்டமாக `சீமராஜா' படத்துக்கு செட் அமைத்திருக்கிறார், முத்துராஜ். அந்த சுவாரஸ்யங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 
 

`சீமராஜா' படத்தோட ஆர்ட் டைரக்‌ஷன்ல என்ன ஸ்பெஷல்? 

``படம் முழுக்கத் திருவிழா மோட்லதான் இருக்கும். அப்புறம், படத்துல மன்னர் காலத்து போர்ஷனும் இருக்கு. அதனால, பீரியட் போர்ஷனையும் இப்போ இருக்கிற சூழலையும் கனெக்ட் பண்ற மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கோம். இப்போ இருக்கிற சூழலை குற்றாலம் பக்கத்துல செட் போட்டு எடுத்தோம். அந்தக் கிராமம், அதுல இருக்கிற சின்னச் சின்ன சந்து உட்பட எல்லாமே செட்தான். மன்னர் காலத்து சீக்வென்ஸுக்கு மகாபலிபுரம் பக்கத்துல செட் போட்டோம். ரெண்டுமே சுவாரஸ்யமாதான் இருந்தது. ஃப்ளாஷ்பேக் காட்சியில போர் நடந்த இடத்தை, கரன்ட் சீக்வென்ஸ்ல சந்தையா மாத்தினோம். மன்னர் காலத்துல இருந்த இடம்தான், இப்போ இப்படி இருக்குனு பார்க்கிறவங்களுக்குப் புரியணும்ல. பொன்ராம் - சிவா - சூரி காம்போவுக்குத் தனிச் சிறப்பு இருக்கு. அதை இந்த ஆர்ட் டைரக்‌ஷன் இன்னும் சிறப்பாக் காட்டும்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்ட் டைரக்‌ஷனுக்கு மட்டும் எவ்வளவு பட்ஜெட் தேவைப்பட்டது? 

``தோராயமா எட்டுக் கோடி செலவு பண்ணியிருக்கோம். `வேலைக்காரன்' படத்தைவிட இந்தப் படத்துக்கான செட் செலவு அதிகம். காரணம், வாள், கேடயம், சாரட்னு எல்லாமே நாங்களே செய்யவேண்டியதா இருந்தது. இதெல்லாம் மக்கள் கவனிப்பாங்களானு தெரியலை. ஆனா, வேலை செய்ற நமக்கு திருப்தி வேணும்ல.. அதுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் மெனக்கெட்டுப் பண்ணியிருக்கோம். கேமரா ஃபிரேமுக்குள்ள இருக்கிற விஷயங்களை நல்லாக் கவனிச்சாங்கன்னா, அதுக்கான டீட்டெயிலிங் அழுத்தமாப் புரியும். பேக் டிராப்ல மலை தேவைப்பட்டுச்சு. அதுக்காக குற்றாலம் போனோம். போர் சீக்வென்ஸுக்கு விசாலமான இடம் தேவைப்பட்டதுனால இருநூறு ஏக்கர் ஃப்ரீ ஸ்பேஸ்ல ஷூட்டிங் நடத்தினோம்." 
 

ஆர்ட் டைரக்‌ஷன்ல இருந்த சிரமங்கள்? 

``கஷ்டமெல்லாம் இல்லை. பிளான் பண்ணிப் பண்ணோம்னு சொல்லலாம். உதாரணத்துக்கு, அரண்மனையில இருந்த ஒரு சிங்கத் தலை காலப்போக்கில் மூக்கெல்லாம் உடைஞ்சு போயிருக்கும்ல... அதுக்குத் தகுந்தமாதிரி நாங்களே சிலை செஞ்சு மூக்கை உடைச்சி விடுவோம். கல் தூண்கள் கம்பீரமா இருந்திருக்கும். அது இப்போ மாட்டுக் கொட்டகையில ஒரு ஓரமாப் போட்டு வெச்சிருப்பாங்க. ஒரே விஷயத்தை, பீரியட் - கரன்ட் சிச்சுவேஷன் ரெண்டுக்கும் பயன்படுத்திக்கிட்டோம்."

செட்டைப் பார்த்துட்டு, இயக்குநர் பொன்ராம் என்ன சொன்னார்? 

``மன்னர் காலத்து சீக்வென்ஸ் இருந்ததுனாலதான், இந்தப் படத்துல நான் கமிட் ஆனேன். பொன்ராம் கதை சொல்லும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. இதோட அவுட்லைன் கொண்டுவர ஆறு மாசமாகிடுச்சு. நான் பண்ணணும்னு நினைச்ச விஷயங்களை சரியா செஞ்சிட்டோம்னு திருப்தி வந்திருக்கு. பொன்ராம் இந்த செட்டை பொருள்காட்சியைப் பார்க்கிற மாதிரி வந்து பார்த்தார். இன்னொரு சுவாரஸ்ய தகவல் என்னன்னா, அவர் முதல் படத்தோட முழு பட்ஜெட்தான், இந்தப் படத்தின் செட் பட்ஜெட். ஒரு பொருளை நாங்களே பிரமாண்டமா செஞ்சு, அதை இன்னொரு சீக்வென்ஸுக்காக நாங்களே உடைச்சு டேமேஜ் பண்ணும்போது பொன்ராம் வருத்தப்படுவார்."
 

இந்தப் படத்துல மறக்க முடியாத விஷயம்?   

``குற்றாலம் பக்கத்துல சிங்கம்பட்டி ஜமீன் வீட்டுக்குப் போய் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்காங்கனு பார்த்தோம். நமக்கு மூணு தலைமுறை தாத்தாக்கள் பெயரே தெரியாது. ஆனா, அவங்க 36 தலைமுறைக்கு முன்னாடி இருந்தவங்களோட பெயரை லிஸ்ட் போட்டு வெச்சிருக்காங்க. அப்போ பயன்படுத்திய பொருள்கள், பிரிட்டிஷ்காரங்க கொடுத்ததுனு அருங்காட்சியகம் மாதிரி நிறைய வெச்சிருக்காங்க. அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பு. தமிழர்களுடைய பாரம்பர்யப் போர் ஆயுதமான வளரியை நாங்களே செஞ்சிருக்கோம். இப்போ பலபேர் கூகுள் பண்ணி பழங்காலத்தைப் பற்றித் தெரிஞ்சுக்கிறாங்க. ஆனா, கூகுளைத் தாண்டி நம்மளைப் பற்றிய பல பொக்கிஷங்கள் இங்கே நேரடியாவே இருக்கு. குறிப்பிட்ட தேதிக்குள்ள படத்தை முடிக்கணும்னு செட் வேலைகளுக்கு 600 பேர், சிஜி வேலைகளுக்கு 500 பேர்னு தீவிரமா வேலை செஞ்சாங்க. எனக்கு ஒத்துழைத்த எல்லாத் தொழிலாளர்களுக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism