அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, வாஸ்தாலஜியில் ஆரம்பித்து, வாய்க்கு வந்த லாஜியெல்லாம் சொல்லி ஆரம்பிப்பார் இந்த அண்ணாச்சி. இவர் தரும் அதிர்ஷ்டக் கல்லை அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். 'தங்க நகை வாங்கினால் அதிர்ஷ்டக் கல் இலவசம்' என்று சொல்லி, இந்த டி.வி. பிசினஸில் சில நகைவியாபாரி களும் இருக்கிறார்கள். காலை நேரத்தில் இவர் களுக்கும் அரை மணி நேர ஸ்லாட் உண்டு!
தங்கத் தகடு தாண்டவராயன்:
கடவுளின் பெயரைச் சொல்லி நடக்கும் வியா பாரம் இது. நம்ம தாண்டவராயன் கொடுக்கும் தங்க டாலரைக் கழுத்தில் போட்டுக்கொண்டால், பிரச்னைகள் எல்லாம் ஓடியே போய்விடுமாம். பிசினஸில் எவ்வளவு லாஸ் ஆனாலும் உடனே மீண்டு வரலாமாம். 'கடவுள் எவ்வளவோ பண்றாரு... இதைப் பண்ண மாட்டாரா?' என்றதும், எதிரில் அமர்ந்திருக்கும் ஏமாளி, டாலருக்கு ஆர்டர் கொடுத்திருப்பார்!
|