Published:Updated:

உலக 'மெகா' சீரியல்ஸ்!

உலக 'மெகா' சீரியல்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி
உலக 'மெகா' சீரியல்ஸ்!
டி.வி. விகடன்
உலக 'மெகா' சீரியல்ஸ்!
உலக 'மெகா' சீரியல்ஸ்!
உலக 'மெகா' சீரியல்ஸ்!
உலக 'மெகா' சீரியல்ஸ்!
உலக 'மெகா' சீரியல்ஸ்!

ம்ம ஊர் அழுகாச்சி சீரியல்கள் மட்டும்தான் வருடக்கணக்கில் ஓடு கின்றனவா? உலகின் மகா, மெகா நிகழ்ச்சிகளின் லிஸ்ட் இது...

உலக 'மெகா' சீரியல்ஸ்!

'தி ஹாஸ்டா லா கோகினா' என்னும் மெக்ஸிகன் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் உலகிலேயே அதிக அதிக வருடங்களாக ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி. கின்னஸில் இடம் பிடித்திருக்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது 1960-ல். 49 வருடங்களாகக் கமகமக்கிறது கோகினா.

'கைடிங் லைட்'... உண்மையான ம்ம்ம்ம்ம்ம்ம்மெகா சீரியல். 1952-ல் ஆரம்பித்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வந்து நடித்து வரும் இந்த சீரியலை 2009 முடிவதற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமாம். பார்க்கலாம்!

'மீட் தி பிரஸ்' எனும் டாக் ஷோவின் வயது 62 வருடங்கள். அமெரிக்காவின் என்.பி.ஸி தொலைக்காட்சி நடத்தும் இந்த நிகழ்ச்சி 1947-ல் ஆரம்பமானது. தொடர்ந்து 16 ஆண்டுகள் புரொகிராம் நடத்திய டிம் ரஸர்ட் கடந்த ஆண்டு மரணமடைந்தார். சளைக்காமல் புதுத் தொகுப்பாளரை வைத்து நிகழ்ச்சியைத் தொடர் கிறார்கள்!

'சி.பி.எஸ். ஈவ்னிங் நியூஸ்' எனும் அமெரிக்க நியூஸ் நிகழ்ச்சியின் வயது 61. இந்த 61

உலக 'மெகா' சீரியல்ஸ்!

வருடங்களில் வெறும் 6 செய்தியாளர்கள் மட்டுமே பணியாற்றி இருக்கிறார்கள். 60 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அதே மேஜையில்தான் இன்றும் செய்தி வாசிக்கிறார்கள்!

'ப்ளூ பீட்டர்' என்பது குழந்தைகளுக்கான மிக நீண்ட தொடர். 1958-ல் யு.கே-வில் ஆரம்பமான இந்த ஷோ, இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சாகசங்கள் நிறைந்த கடல் பயணம்தான் கதைக் கரு. சிந்துபாத் ஞாபகத்துக்கு வருகிறாரா?

'ஹாக்கி நைட் இன் கனடா' என்பது கனடாவில் ஒளிபரப்பாகும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. 1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோதான் உலகிலேயே நீண்ட காலமாக விளையாடும் ஸ்போர்ட்ஸ் ஷோ!

சீரியலை சீக்கிரம் முடிக்க மாட்டேங்கிறாங்க என்று கோபித்துக்கொள்ளும் அம்மாக்களே... கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிடுங்கள்!

 
உலக 'மெகா' சீரியல்ஸ்!
-சேவியர்
உலக 'மெகா' சீரியல்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு