Published:Updated:

டி.வி. பார்க்காத கிராமங்கள்!

டி.வி. பார்க்காத கிராமங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. விகடன்
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
டி.வி. பார்க்காத கிராமங்கள்!

ல்லாத பொண்டாட்டிக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்த கதையாக மின்சாரமே இல்லாத ஊருக்கு டி.வி. கொடுத்து அசத்தியிருக்கிறது அரசாங்கம்.

கொடைக்கானல் பாச்சலூர் அருகே இருக்கும் சிறுவாட்டுக்காடு கிராமத்து மக்களிடம் பேசினால், ''ஊருக்கே டி.வி-யைக் காட்டுற டவர் இந்த மலை யிலதான் இருக்கு. டவர் வந்தப்ப 'மலையிலதான் நல்லா டி.வி. தெரியும்'னு நினைச்சோம். ஆனா, இன்னிய வரைக்கும் ஃபாரஸ்ட்காரங்க கரன்ட் கனெக்ஷனே கொடுக்க மாட்டேங்குறாங்க. ஒட்டன்சத்திரத்துல டி.வி. வந்ததை எங்க ஊரே திரண்டு போய்ப் பார்த்துட்டு வந்தோம். ஊர் நாட்டுல சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனா முதல்ல டி.வி-யைப் போட்டு உக்காந்திருவோம். 'நீங்க எங்களைப் பாக்க வந்தீங்களா, இல்லை டி.வி. பாக்க வந்தீங்களா?'ன்னு கிண்டலடிப்பாங்க. பஸ்ல ஏறினாலும், டி.வி. இருக்கிற பஸ்லதான் ஏறுவோம். யாராச்சும் டி.வி-யை மறைச்சுக்கிட்டு நின்னா, எங்க ஊரு ஆளுக சண்டையே போட்டுருவாங்க. உங்களுக்கு டி.வி-ங்கிறது சாதாரண விஷயம். ஆனா, எங்களுக்கு அது பெரிய அதிசயம் மாதிரி. கட்டக் கடைசில இப்போ எங்க ஊருக்கும் கலைஞர் டி.வி. கொடுத்து இருக்காங்க. ஆனா, அதை மட்டும் வெச்சு என்ன செய்ய? அதைக் கறுப்பா, செவப்பான்னுகூடப் பாக்க முடியாம எல்லா டி.வி-யும் பரண்ல தூங்குது. நாங்க 300 குடும்பம்

டி.வி. பார்க்காத கிராமங்கள்!

இருக்கோம். ஏதாச்சும் செஞ்சு முதல்ல கரன்ட் குடுக்கச் சொல்லுங்கையா'' என்கிறார்கள் பொருமலாக! இதே போன்ற இன்னொரு ஊர் கோவை-ஆனைகட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் சேம்புக்கரை மலைக் கிராமம். 40 வீடுகள் இருக்கும் இந்த ஊருக்கும் மின்சார வசதி கிடையாது. இங்கும் இலவச கலர் டி.வி. கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு சில வீடுகளில் மட்டும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் இருக்கின்றன.

ஒரு பேட்டரியில் மூன்று மணி நேரம் மின்சாரத்தைச் சேமித்துவைத்து டி.வி-க்கு கனெக்ஷன் கொடுக்கிறார்கள். டி.டி.ஹெச். டிஷ் வாங்கிவைத்து, தினமும் சினிமா போடும் மூன்று மணி நேரம் மட்டும் ஊரே திரண்டுவந்து பார்க்கிறது. இங்கும் சூப்பர் ஸ்டார்தான் ஹிட்!

 
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
-இரா.முத்துநாகு, அ.சுப்புராஜ்,தி.விஜய்
டி.வி. பார்க்காத கிராமங்கள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு