டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் என்பதன் சுருக் கமே டி.ஆர்.பி. சேனல் பார்ட்டிகளைப் பதறவைக்கும் மந்திரச் சொல். டி.ஆர்.பி. ஏற ஏற... விளம்பரக் கட்டணம் எகிறும். உதாரணமாக, தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகை என்றால், அதில் குறிப்பிட்ட 700 வீடுகளைத் தேர்வு செய்து, அவர்களின் வீடுகளில் 'டேம் பாக்ஸ்' என்கிற கருவியைப் பொருத்திவிடுவார்கள். அந்த வீடுகளில் டி.வி-யை ஆன் செய்யும்போது டேம் பாக்சும் ஆன் ஆகிவிடும். அவர்கள் என்னென்ன சேனலுக்குத் தாவுகிறார்கள், எந்தெந்த நிகழ்ச்சி களைப் பார்க்கிறார்கள் என்பது பதிவாகிவிடும். வாரத்துக்கு ஒருமுறை சென்று கருவியில் பதிவான தகவல்களைச் சேகரிப்பவர்கள் அதை 7 கோடி மக்களுக்கான தகவல்களாக மாற்றுகிறார்கள். இதுதான் டி.ஆர்.பி.
ஒளிபரப்பாகும் நேரத்தைப் பொறுத்து, நிகழ்ச்சிகள் இவ்வளவு டி.ஆர்.பி. பெற வேண்டும் என்று சேனல் தரப்பு ஃபிக்ஸ் செய்து வைத்திருக்கும். ரேட்டிங்கைவிட சற்றுக் குறைந்தாலும் கதை மாற்றம், டைரக்டர் மாற்றம், கேரக்டர் மாற்றங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
இதனால்தான் சீரியல்களில் அடிக்கடி புதிதாக கிளைக் கதைகள் சேர்க்கப்பட்டு, பில்டப் ஏற்ற முயற்சி செய்கிறார்கள். டபுள் ஆக்ட், டெரரிஸ்ட், போலீஸ் என்று தெற்றுப்பல் நடிகை நடித்த சீரியல் பல தளங்களில் பயணிக்கத் தொடங்கியதால் டல்லடிக்கத் தொடங்கியது. குடும்பப் பிரச்னைக்குள் கதையைக் கொண்டுபோகச் சொல்லி ஆர்டர் போட்டது சேனல் தரப்பு. கதையை மாற்ற மறுத்த |