டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
டி.வி. விகடன்
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

லகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? நீங்களே பாருங்களேன்...

டெஸ்ட்ராய்டு இன் செகண்ட்ஸ் (Destroyed in seconds)

விநாடிகளில் கடந்துபோகும் அதிர்ச்சிகளைக் 'கபக்' என கேமராவில் லவட்டித் தரும் அதிரடி நிகழ்ச்சி. ரன்வேயில் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் 'குபுக்'கெனத் தீப்பிடிக்கும். வேகமாகப் பறக்கும் படகுகள் படாரென்று மோதிச் சிதறும். ரேஸ் கார்கள் மடார் என மோதி வெடிக்கும். அமைதியான இடத்தில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும். இதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் சில சாம்பிள்கள். பார்வையாளனின் மனதில் அதிர்ச்சிக் கண்ணிவெடியை வெடிக்கவைத்து, நிகழ்ச்சியின் பின்னணியை விரிவாக அலசுவது இவர்களின் ஸ்டைல். இதன் திரில்லுக்கு எக்கச் சக்க ரசிகர்கள்!

டர்ட்டி ஜாப் (Dirty job)

யாருமே செய்யக் கூச்சப்படும், முகம் சுளிக்கும் வேலைகள்தான் இதன் ஸ்பெஷல். நிகழ்ச்சியை நடத்தும் மைக் ரோதானே அந்த வேலையில் குதித்து, நாள் முழுதும் அதைச் செய்வார். ஒருநாள் சாக்கடை அள்ளுவார்... இன்னொரு நாள் பிணம் எரிப்பார். இந்த நேரடி அனுபவ நிகழ்ச்சி பயங்கர ஹிட். 'அழுக்கான வேலை செய்பவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்... அழுக்கில்லாத வேலை செய்பவர்கள் அழுது வடிகிறார்கள்' என்பது மைக் ரோ தரும் தத்துவப் பளிச்!

ஒன் வே அவுட் (One Way Out )

சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சி. 'ஐயோ' எனப் பயத்தில் பார்வையாளர்களைப் பதறவைப்பதே நோக்கம். உடல் முழுதும் இரண்டு லட்சம் தேனீக் களுடன் ஒரு சிறு பெட்டியில் அடைந்து கிடப்பார் ஒருவர். மற்றொரு ஷோவில், ஒரு பெட்டிக்குள் ஒருவரை அடைத்து மலை உச்சியில் இருந்து உருட்டிவிடுவார்கள். நிமிடத்துக்கு 126 முறை உருண்டு வந்து பெட்டியில் இருந்து எழுந்து வந்து 'ஹாய்' சொல்வார். இந்த ஷோ நடக்கும்போதெல்லாம் விளம்பரதாரர்களுக்கு செம வேட்டை!

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

ரெஸ்க்யூ 911 ( Rescue 911 )

911 என்பது அமெரிக்காவின் அவசர போலீஸ் எண். குற்றங்கள், சாலை விபத்துக்கள், அவசர மருத்துவ உதவிகள், தீ விபத்து எனப் பல்வேறு உதவிகளுக்கு மக்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்வார்கள். இதற்காக போலீஸ் கிளம்பும்போது கூடவே இந்த டி.வி. டீமும் கிளம்பிவிடும். அந்த ரெஸ்க்யூ ஆபரேஷனை அப்படியே லைவாகக் காட்டுவார்கள்.

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

அமெரிக்காவில் ஹிட் அடித்த இது இப்போது 45 நாடுகளில் சக்கைப்போடு போடுகிறது. 'அவசர போலீஸ் 100'கூட நல்லாத்தானே இருக்கு? யாராச்சும் டிரை பண்ணுங்களேம்ப்பா!

சர்வைவர் மேன் ( Servivor Man )

'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே... இவன் எவ்வளவுதான் தாங்குவான்?' என டெஸ்ட் பண்ணும் மேட்டர். இதை நடத்தும் லெஸ் ஸ்ட்ரோட் உணவு, உடை, உறைவிடம் என எதுவுமே இல்லாமல் தனிமையில் திகிலடிக்கும் பிரதேசங்களில் ஒரு வாரம் தங்குவார். அடர்ந்த காடு, மலைப் பகுதி, தீவு என ஏதோ ஓர் அமானுஷ்ய இடத்தைத் தேர்வு செய்வார். அங்கே இவர் என்னென்ன செய்கிறார், எப்படிச் சாப்பிடுகிறார் என்பதையெல்லாம் இவரேதான் படம் பிடிக்க வேண்டும். கடும் மழை, கொடும் பனி, விலங்குகள் எனப் பல்வேறு அச்சுறுத்தல்களுடன் நடக்கும் இவருடைய அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை. வெற்றிகரமாகப் பயணத்தை முடித்த பின், தனது அனுபவங்களை இவர் விளக்குவதுதான் ஷோ!

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

எ ஹாண்டிங் (A Haunting)

பேய்களின் அட்டகாசம், பேய் ஓட்டுவது, பேயை வரவழைப்பது என திடுக் நிமிடங்களைப் பதிவு செய்வதுதான் இதன் ஸ்பெஷல். கற்பனை கலக்காத அக்மார்க் உண்மைகளுக்கு மட்டுமே இதில் அனுமதி என்கின்றனர். பேய்களை நேரில்

கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!

பார்த்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் விவரிக்கும்போது, கண்களின் மின்னும் பயமே நிகழ்ச்சியின் ஹைலைட். நம்பிக்கை இல்லாவிட்டாலும்கூட பார்க்கும்போது முதுகெலும்பில் ஐஸ் நதி ஓடத்தான் செய்கிறது!

பிளைண்ட் டேட் (Blind Date)

நம்ம ஊர் 'ஜோடி நம்பர் 1'-ன் ஒரிஜினல் வெர்ஷன் இது. மூன்று பெண்கள் வருவார்கள். அவர்கள் டேட்டிங் செல்ல, போனில் பேசியே ஒரு பையனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பின் அது கிழவனாக இருந்தாலும் நோ சொல்ல முடியாது. அப்புறமென்ன ஜோடிகள் டேட்டிங் செல்லும். அதை 'வெட்கம் கெட்ட' கேமரா விடாமல் துரத்திப் படம் பிடிக்கும். இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுக்கு நாடு பெயர் மட்டும் மாறும். ஆனால் ரசிகர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்!

 
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!
-சேவியர்
கொஞ்சம் தில்லு... கொஞ்சம் லொள்ளு!