ஆடைகளை விட்டுவிட்டு, ஆடைகள் மறைக்காத பிரதேசத்தைத்தான் அதிகம் காட்டுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் தொலைக்காட்சி விமர்சகர்கள். இது போக, 'எஃப் டி.வி-யில் வருகிற ஹோட்டல் விளம்பரங்கள் எல்லாமே ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உயர்தரமான விபசாரக் கூடங்கள்' என்கிற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள்.
சரி, டி.வி-தான் இப்படி என்றால், டி.வி-யின் ஓனர் மைக்கேல் ஆடம்... செம ப்ளே பாய் என்கிறார்கள். ஆடம், 60 வயது தாத்தா. ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஜெர்மனிக்குப் போனபோது, பப்ளிசிட்டி ஆசை காட்டி ஈவா என்கிற 21 வயது மாடலைத் தன்னுடனே வைத்துக்கொண்டார். சில நாட்களுக்குப் பின் 'இந்தத் தாத்தா ரொம்ப மோசம்' என்று ஈவா போலீஸில் புகார் கொடுக்க... அலர்ட் ஆகி எஸ்கேப் ஆனார் ஆடம்.
தாத்தா, பெண்கள் விஷயத்தில்தான் அப்படி இப்படி. பண விஷயத்தில் படு கறார். ஃபேஷன் ஷோவில் வரும் எந்த மாடலுக்கும் சம்பளம் கிடையாது. விளம்பரங்கள் மூலம் வரும் வருமானத்தோடு, எஃப் டி.வி-யை வைத்துப் பிழைக் கும் இரவு விடுதிகள், மதுக்கூடங் கள் மூலம் கோடிகள் குவிகின்றன. அந்தச் சந்தோஷம்தான் தாத்தா வைத் துள்ளி வி¬ளையாட வைக்கிறது!
|