பிரீமியம் ஸ்டோரி
உயிரோடு விளையாடு!
டி.வி. விகடன்
உயிரோடு விளையாடு!
உயிரோடு விளையாடு!
உயிரோடு விளையாடு!
உயிரோடு விளையாடு!
உயிரோடு விளையாடு!
உயிரோடு விளையாடு!

மெரிக்காவை அலறவைக்கும் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்று ஃபியர் ஃபேக்டர். படுபயங்கரமான, அருவருப்பூட்டும் சவால்களை எதிர்கொள்வதே கான்செப்ட்!

சிலந்தி, கரப்பான், தவளை, பல்லி போன்றவற்றை உயிரோடு கடித்துத் தின்ன

உயிரோடு விளையாடு!

வேண்டும். ஒரு தொட்டி முழுக்கப் பசுவின் ரத்தம் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் மிதக்கும் பொருளை வாயால் கவ்வி எடுக்க வேண்டும். நூற்றுக்கணக்கான முதலைக் குட்டிகள் மொய்த்துக்கொண்டு இருக்கும் தொட்டிக்குள் கழுத்தளவு தண்ணீரில் நின்று முதலைகளுக்கு இடையே தண்ணீரில் மிதக்கும் பந்துகளை வாயால் கவ்வி எடுக்க வேண்டும். பாம்புகள் நிரம்பியிருக்கும் தண்ணீர்த் தொட்டி யில் மூழ்கி, அதன் அடிப்பாகத்தில் உள்ள ஓட்டை வழியே தப்பிக்க வேண்டும். இந்த சாம்பிள்ஸ் போதுமா?

உயிரோடு விளையாடு!

'ரொம்பப் பயிற்சிக்குப் பின் நடத்தப்படும் நிகழ்ச்சி இது. யாரும் வீட்ல டிரை பண்ணாதீங்க!' எனும் எச்சரிக்கையோடுதான் நிகழ்ச்சியே துவங்குகிறது. 'உயிரைப் பணயம்வைத்து' என்பது இந்த நிகழ்ச்சிக் குத்தான் கன கச்சிதம். அதனாலேயே நிகழ்ச்சியின் வருமானத்தில் 5 சதவிகிதம் இன்சூரன்சுக்கே போகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு மில்லியன் டாலர்கள் செலவா கிறதாம்.

பயமுறுத்துவது மட்டுமில்லை... பயங்கர அருவருப்பையும் தருவதால்தான் பலரும் ஃபியர் ஃபேக்டரை வெறுக்கிறார்கள். சாக்கடை, குப்பை, அருவருப்பான பூச்சிகள் என அடுக்கடுக்காக வரும் அசிங்கங்களைப் பார்த்த பின் சாப்பிட முடியவில்லை என வழக்குகூடப் போட்டிருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அதைப் படம் பிடிப்பவர்களுக்கு? பல பேர் 'இந்த வேலையே வேணாம்டா சாமி' என அலறி, எஸ்கேப் ஆனதும் நடந்திருக்கிறது. இவ்வளவு அருவருப்பையும் மீறி ஏன் இதில் பங்கேற்கிறார்கள்? டப்பு சாமி, டப்பு!

 
உயிரோடு விளையாடு!
-ரயன்
உயிரோடு விளையாடு!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு