இதற்கான உதாரணங்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு தரும் சம்பளத்தோடு ஒப்பிட்டால்... இதே சீரியல் உலகில் நம்பர் ஒன் ரேஞ்சில் இருக்குற ஹீரோவின் சம்பளம் ஜுஜுபியாக இருக்கும்.
''சீரியல்களில் எப்போதும் லேடீஸ் ஃபர்ஸ்ட் ஃபார்முலாதான். அரசி, கஸ்தூரின்னு ஹீரோயின் கேரக்டர் பெயரைத்தான் வைக்குறாங்க. டைட்டில் கார்டிலும் ஹீரோயின் கள் பெயர்தான் முதலில் வரும்.
சூட்டிங் ஸ்பாட்டில் சினிமா டு சீரியல் ஹீரோயினுக்குத் தர்ற வசதியில் ஒரு பகுதிகூட எங்களுக்கு பண்ணித் தர்றது இல்லை. ஏ.சி. கேரவனில் இருந்து நடிகை கீழே இறங்கியதும், அவர் சம்பந்தப்பட்ட ஸீன்களைப் பரபரன்னு சூட்டிங் எடுப்பாங்க. அதுவரைக்கும் நாங்க ஓரமா உட்கார்ந்து இருக்கணும். அவங்களோட எல்லா ஸீன்களையும் எடுத்து முடிச்சிட்டு காம்பினேஷன் ஷாட் இருந்தா மட்டும் எங்களைக் கூப்பிடுவாங்க.
|