Published:Updated:

பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!

பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!

பிரீமியம் ஸ்டோரி
பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!
டி.வி. விகடன்

'பார்த்ததுமே பத்திக்கிற மாதிரி புரொகிராம் பண்ணணும்' என நினைத்த ஸ்டார் ப்ளஸ், 'தி மொமன்ட் ஆஃப் ட்ரூத்' ஸ்டைலில் 'சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்!) என்கிற கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆரம்பித்தது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு ஆட்டம் பாம்!

சாம்பிளுக்கு இதோ 'அனிதா கேல்கர்' என்ற குடும்பத் தலைவி கலந்துகொண்ட ஒரு எபிஸோட்... ''ஆபீஸ் பொருள் எதையாவது திருடியது உண்டா... உண்மை சொன்னால் ஒரு லட்சம்'' - முதல் கேள்வியோடு ஆரம்பிக்கிறது போட்டி. அனிதா உண்மை சொல்கிறாரா, பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க லை டிடெக்டரை (பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை வைத்துக் கண்டுபிடிக்கும் கருவி) இணைத்திருக்கிறார்கள். ஐந்தாவது கேள்வியே அதிரடியாக இருக்கிறது. ''திருமணமான பின் வேறு ஆண்களுடன் உறவுகொண்ட அனுபவம் உண்டா?'' அனிதா கணவரைப் பார்க்க, கணவர் பதற்றமாகிறார். லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு அனிதா ''ஆம்'' என்கிறார். லை டிடெக்டர் 'உண்மை' என்கிறது. அனிதாவின் கணவர் தலையைக் குனிந்துகொள்கிறார். ''உங்கள் கணவர் ஊரில் இல்லாதபோது உங்கள் பாய் ஃப்ரெண்டை வீட்டுக்கு அழைத்தது உண்டா?'' இது ஆறாவது கேள்வி. கணவர் பக்கம் திரும்பி ''ஸாரி'' என்று 'பாவ மன்னிப்பு' கேட்கிறார் அனிதா. பரிசுத் தொகை 10 லட்சத்தைத் தொடுகிறது.

பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!
பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!

கடைசியாக, ''உங்களின் கணவரைவிட உங்கள் பாய் ஃப்ரெண்ட் உங்களுக்குப்பொருத்த மான கணவராக இருந்திருப்பாரா?'' என்கிற கேள்விக்கு

பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!

அனிதா ''இல்லை'' என்கிறார். லை டிடெக்டர் 'பொய்' என்கிறது. பொய் சொன்னதால் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறார் அனிதா.

கலங்கிய கண்க ளோடு கைதட்டி வர வேற்கிறார் அனிதாவின் கணவர். அனிதா மாதிரி நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி ஒரு பலி கடாவைக் கொண்டுவந்து கேமரா முன் நிறுத்தி, அவரை லட்சாதிபதியாக்கி அனுப்புகிறது ஸ்டார் டி.வி!

பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!
- பி.ஆரோக்கியவேல்
பாய் ஃப்ரெண்ட்... ஹஸ்பெண்ட்... யார் பெஸ்ட்?!
                            
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு