கண்டித்துக் கிளம்பிய குரல்கள் ஷோவுக்குப் பப்ளிசிட்டி கொடுத்தன. டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்ற நிகழ்ச்சியின் நடுவர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டார்கள். இந்த ஸ்டைலையே பல சேனல்கள் ஃபாலோ பண்ணின. இந்தப் பாடகர் போட்டி படு ஹிட்!
ஸ்டார் ஒன் டி.வி-யில் வந்த 'நாச் பலியே' டான்ஸ் புரொகிராம்தான், தமிழின் 'ஜோடி நம்பர் ஒன்', 'மானாட மயிலாட' என்று சக்கைப்போடு போடுகிறது. சர்ச்சை நாயகி ராக்கி சாவந்த் அப்போதைய பாய் ஃப்ரெண்ட் அபிஷேக்கோடு கலந்துகொண்டார். நேயர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்களில் டெக்னாலஜியைப் பயன்படுத்தி, ராக்கி மோசடி செய்வதாக சேனல் புகார் சொன்னது. சிறப்பாக டான்ஸ் ஆடியும் தன்னை வெளியேற்றிவிட்டதாகப் புகார் வாசித்தார் ராக்கி. எதிர்பார்த்த மாதிரியே டி.ஆர்.பி. எகிறியது. பிரச்னை பண்ணுவதற்காகவே ராக்கிக்கு சேனல் தரப்பு பெரும் தொகை கொடுத்தார்கள் என்றெல்லாம் புகார் கிளம்பின.
'இஸ் ஜங்கிள் ஸே முஜே பசாவ்' கொஞ்சம் 'ஏ'டாகூடமான சோனி டி.வி. ஷோ. ஆண், பெண் பிரபலங்களை ஓர் இடத்தில் இறக்கிவிட்டு என்ன செய்கிறார்கள் என்று காட்டுவார்கள். சீரியல்களில் இழுத்துப் போர்த்தி நடித்த நடிகைகள், பாடகர் மிக்காசிங்கோடு குளியல் காட்சிகளில் தாராளம் காட்ட, ஷோ பிக்கப் ஆகிவிட்டது. நல்லவேளையாக இந்த நிகழ்ச்சி இன்னும் தமிழ் சேனல்களில் வரவில்லை!
|