டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

சிங்கமும் சிறுத்தையும் எங்கள் நண்பர்கள்!

சிங்கமும், புலியும், சிறுத்தையும், கரடியும் நமக்கு வண்டலூர் ஜூ வேடிக்கை மிருகங்கள். இவர்களுக்கு?

சிங்கமும் சிறுத்தையும் எங்கள் நண்பர்கள்!
சிங்கமும் சிறுத்தையும் எங்கள் நண்பர்கள்!

டிஸ்கவரி சேனலிலும், அனிமல் பிளானட்டிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் படமாக்க மாதக்கணக்கில் அடர்காடுகளுக்குள் தவம் கிடக்கிறார்கள் இவர்கள்.

''தென்ஆப்பிரிக்கக் காட்டில் சிங்கம் வேட்டையாடுவதை சூட் பண்ணிக்கொண்டு இருந்தேன். திடீரென்று பின்னால் இருந்து சிங்கம் ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. போராடி மரத்தில் ஏறி நான் உயிர் தப்பினாலும், என் இரண்டு விரல்களை சிங்கம் மென்று துப்பிவிட்டது'' என்று சிரிக்கிற சித்தார்த்தா ராணா, சிக்கிம் மாநிலத்துக்காரர். கடந்த ஆண்டுக்கான 'சிறந்த வைல்டு லைஃப் கேமராமேன்' விருதைப் பெற்றவர்.

ஸ்டீவ் இர்வின் எல்லோருக்கும் தெரிந்த ஸ்டார். இவரது 'குரொக்கடைல் ஹன்ட்' நிகழ்ச்சி அனிமல் பிளானட்டின் ஹிட் ஹாட். இர்வின் தன் உயிரைப் பணயம் வைத்து எடுத்த டாக்குமென்ட்டரிகள் ஒவ்வொன்றும் இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை.

சென்னைத் தமிழர் அல்போன்ஸ் ராய், 'வைல்டு ஃலைப்' டாக்குமென்ட்டரிக்காக ஆஸ்கருக்கு இணையான எம்மி விருதைப் பெற்றவர். ''புலியின் ஒரே ஒரு க்ளோஸ்-அப் முறைப்புக்காக மூன்று மாதங்கள் காத்திருந்திருக்கிறேன். மானைப் புலி வேட்டையாடும் காட்சியைப் படம் பிடிக்க நான்கு நாட்கள் தண்ணீர் கூட இல்லாமல் தவித்தது உண்டு. என்னுடன் சேர்ந்து என் உதவியாளர்களும் பல முறை விலங்குகளிடம் காயம்பட்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கைக்கு அசாத்திய பொறுமை வேண்டும். என் வாழ்க்கையில் எத்தனையோ தடவை ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் 10 மணி நேரம் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன் தெரியுமா?'' - சிரிக்கிறார் ராய்!

சிங்கமும் சிறுத்தையும் எங்கள் நண்பர்கள்!
- ஆர்.சரண்
சிங்கமும் சிறுத்தையும் எங்கள் நண்பர்கள்!