Election bannerElection banner
Published:Updated:

லன்ச் பாக்ஸ் எடுத்துட்டு வேலைக்குப் போனார் அஜித்! - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

Ajith
Ajith

நேர்கொண்ட பார்வை படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்

அஜித்தைப் பற்றி அவரோட ரசிகர்கள் மத்தியில் நிறைய செய்திகள் வலம் வரும். சில செய்திகளைப் பார்க்கும்போது, ‘ஓ இப்படியல்லாமா இருக்கார்’னு தோணும். நீங்க அவர்கூடவே பயணமாகுறீங்க. அஜித் எப்படி இருக்கார்?

அஜித் சார் பாசிட்டிவான மனிதர். தன்னைச் சுற்றி பாசிட்டிவிட்டியை மட்டுமே தக்கவெச்சுக்கணும் நினைப்பவர். ஃபேமிலி மீது அக்கறையானவர். தன் ரசிகர்கள் பற்றி ரொம்ப கவலைப்படுவார். ‘ஒவ்வொரு ரசிகரும் சினிமா சினிமானே இருக்கக் கூடாது. அது மட்டுமே வாழ்க்கை கிடையாது. தங்களோட ஃபேமிலியை, தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்துக்கணும்’னு நினைப்பார். ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப ஆர்வமானவர். `இன்னைக்கு இருக்கிற பசங்க ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இல்லாம இருக்காங்க, உடம்பைக் கவனிக்கிறதில்லை. படிக்கிறது மட்டுமே கல்வியில்லை. நிறைய விளையாடணும். இவ்வளவு விபத்துகளுக்குப் பிறகும் நான் நல்லா இருக்கேன்னா, அதுக்கு நான் சின்ன வயசுல விளையாடின ஸ்போர்ட்ஸ்தான் காரணம். ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் பண்ணணும்’னு ஸ்போர்ட்ஸ் பற்றிப் பேசிட்டே இருப்பார்.

சமீபத்துல எனக்குத் தெரிஞ்ச ஒரு போலீஸ் அதிகாரியைச் சந்திக்கும்போது, `உங்க ஹீரோ கன் ஷூட்டிங் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கார்’னு புதுத்தகவல் சொன்னார். அதுவும் எனக்குத் தெரியாது. ஒருமுறை ஷூட்ல கேட்டேன். `ஆமாம் சார் பண்ணிட்டு இருக்கேன். மாவட்ட லெவலில் ஸ்டேட் லெவலில் போட்டியில கலந்துக்கணும்னு ஆசையிருக்கு’னு சொன்னார். இன்னொரு முக்கியமான விஷயம்னா, அக்கவுன்ட்ஸ் உட்பட அவரோட ஆபீஸ் வேலை முழுவதும் அவர்தான் பார்க்கிறார். இதுதவிர, ஃபேமிலிக்கு நேரம் ஒதுக்கணும், ஷூட்டிங் பண்ணணும்னு எப்போவுமே அவரை அப்டேட்டா வெச்சுக்கிறார். இதுதான் அவரின் பலம்.

அஜித்
அஜித்

அப்புறம் அவரைப் பற்றி ஒரு எளிமையான சம்பவத்தோட முடிக்கலாம்னு நினைக்கிறேன். இது நான் கேள்விப்பட்டது. அவர் வீட்ல டெலிபோன் ரிப்பேர். அதை சர்வீஸ் பண்ண டெலிபோன் ஆபரேட்டர் வந்திருக்கார். அஜித் சார் வீடுன்னு தெரிஞ்சதும், ‘ஏதாவது கவனிங்க’னு கேட்டிருக்கார். இதைக் கேள்விப்பட்டு அவரைக் கூப்பிட்டு, `உங்களுக்கு அரசாங்கத்துல சம்பளம் கொடுக்குறாங்கள்ல, அப்புறம் ஏன் காசு கேட்குறீங்க.

உங்களோட வேலையை நீங்க சரியா பண்ணுங்க. இப்படி காசெல்லாம் கேட்கக் கூடாது’னு அறிவுரை சொல்லியிருக்கார். வந்த டெலிபோன் ஆபரேட்டரும் நெகிழ்ந்துபோய், ‘இனி யார்கிட்டயும் காசே வாங்கமாட்டேன் சார்’னு சொல்லிட்டுப் போனாராம். பிறகு ஆறு மாசம் கழிச்சு மே மாசம், அஜித் சார் அவரோட மேனேஜருக்குப் போன் பண்ணி, அந்த டெலிபோன் ஆபரேட்டர் தனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்னு சொன்னார். அவங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட ஏதாவது உதவி வேணுமானு கேளுங்க’னு கேட்டு அவங்களுக்கு ஃபீஸ் கட்டியிருக்கார். வெறும் 500 ரூபாய் டிப்ஸ் தராம தவிர்த்தவர், அவரோட குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டியிருக்கார். இப்படியான ஒரு பெர்சன்தான் அஜித் சார்.”

லன்ச் பாக்ஸ் எடுத்துட்டு எம்.ஐ.டி. வேலைக்குப் போனார் அஜித்! - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive
லன்ச் பாக்ஸ் எடுத்துட்டு எம்.ஐ.டி. வேலைக்குப் போனார் அஜித்! - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க?”

“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு?”

“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க?”

“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க?”

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!தாது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு