Published:Updated:

நேர்கொண்ட பார்வை பார்த்துட்டு அஜித் ரியாக்‌ஷன் என்ன? - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''

“வித்யாபாலனுக்கு என்னமாதிரியான கதாபாத்திரம்?, படம் முடிஞ்சதும் அவங்க என்ன சொன்னாங்க?”

” ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் மும்பையில நடந்துட்டு இருந்த சமயம். இந்தப்பட ஃபைனல் கரெக்ஷன்ஸ் பற்றிப் பேச அஜித், போனி சாரைப் பார்க்க அங்கே போயிருந்தேன். அப்போ, ‘அஜித் சாருக்கு யார் ஜோடியா பண்ணினா நல்லா இருக்கும்’னு பேசினோம். அப்போதான் வித்யாபாலன் மேடத்தின் பெயர் அடிபட்டது. போனி சார் பேசினதும் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. அவங்களுக்குக் கதை சொல்ல முயற்சி பண்ணினேன். ‘நீங்க கதை சொல்லணும்னு அவசியம் இல்லை. நான் பண்றேன்’னு சொன்னாங்க. அவங்க ஃப்ரேம்ல வந்து நின்னாலே நமக்கு நம்பிக்கையா இருக்கும். சூப்பரான நடிகை. அவங்களை எப்படி இவ்வளவு நாளா தமிழ்ல மிஸ் பண்ணினாங்கனு தெரியலை. அவங்களுக்கு மொழிப் பிரச்னையும் இல்லை. தமிழும் நல்லா பேசுறாங்க. அவங்க மும்பையில தமிழர்கள் நிறைய பேர் வசிக்கிற பகுதியிலதான் இருக்காங்க. தமிழ் சினிமாவை ரெகுலரா ஃபாலோ பண்றாங்க. சமீபத்துலகூட தெலுங்குப் படம் ஒண்ணு பண்ணியிருக்காங்க. ஏதாவது கரெக்ஷனுக்காக போன்ல பேசினா, ‘தல எப்படியிருக்கார்? அவரோட ஃபேன்ஸ் எப்படி அவர் மேல அவ்வளவு லவ் வெச்சிருக்காங்க’னு கேட்பாங்க. அவங்களோட வொர்க் பண்ணினது ஸ்வீட்டான அனுபவம்.”

Ajith, Nirav Shah
Ajith, Nirav Shah

“எல்லோரைப் பற்றியும் சொல்லிட்டீங்க. அஜித் எப்படி நடிச்சிருக்கார்?”

“உங்களுக்கு மட்டுமல்ல, முதல்நாள் ஷூட்லகூட ஒட்டுமொத்த யூனிட்டும் இந்தக் கேள்வியோடத்தான் காத்திருந்துச்சு. முதல்நாளே கோர்ட் ரூம் காட்சிகள்தான் எடுத்தோம். ‘அமிதாப் சார் பண்ணின கேரக்டரை அஜித் சார் எப்படி அவர் ஸ்டைல்ல பண்றார்னு பார்ப்போம்’னுதான் காத்திருந்தாங்க. எளிமையா சொல்லணும்னா, அசத்திட்டார். நான் சொல்றது மிகையில்லைனு படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். முதல்லயே சீன் பேப்பர் கொடுத்துடுவோம். ஸ்பாட்ல டயலாக்கைப் படிச்சுட்டு 2 மானிட்டர் பார்த்துட்டு டேக் போலாம்னா, நாம எத்தனை டேக் கேட்டாலும் நடிச்சிட்டே இருப்பார். ‘இந்த ரிதம்ல பேசினாதான் சரியா இருக்கும் சார்’னு டிஸ்கஷ் பண்ணி பண்றதுனு எல்லாத்துக்கம் வெளிப்படையா இருந்தார். எல்லாத்தையும் புரிஞ்சுப்பார். ‘ஓகேவா, நாட் ஓகேவா’னு நான் சொல்ற ‘ஓகே’விலேயே புரிஞ்சுப்பார். நான் சொல்ற ஓகேவுல டவுட் இருந்தா ‘எனக்காக ஒன்மோர் போகலாம் சார்’னு சொல்லி ஒன்மோர் பண்ணிடுவார். அவரைப்பொருத்தவரை இந்தப் படம் நல்லா வரணும், அவ்வளவுதான். அதுக்காக தீவிரமா வேலை பார்த்தார். இதுவரை பார்த்த மாதிரி இல்லாம இதில் ஒரு புது அஜித் சாரைப் பார்க்கலாம். உண்மையைச் சொல்லணும்னா பன்ச் பேசி சவால் விடுறதைவிட கதைக்குள்ள அவர் யதார்த்தமா பேசி நடிக்கும்போதுதான் அவர் தன்னை வசதியா உணர்கிறார்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நீதிமன்றக் காட்சிகள்தான் இதில் பிரதானம். அந்தக் காட்சிகள் எப்படி வந்திருக்கு?”

“கோர்ட் காட்சிகளைக் கேமராவை அங்கே இங்கே வெச்சு, கட் பண்ணி எடுக்கிறதெல்லாம் கிடையாது. ஒரு சீன்னா அதை அப்படியே ஃபுல்லா பிளே பண்ணி எடுத்தோம். ஒரு பெரிய டயலாக்கா இருந்தாலும், அப்படியே முழுக்க பேசவெச்சு எடுத்தோம். கட் கிடையாது. ஆமாம், ஒரு கோர்ட்ல விவாதம் நடந்தா எப்படி இருக்குமோ அதேமாதிரிதான ஷூட் பண்ணினோம். இந்தக் காட்சிகளை ஹைதராபாத்ல ஷூட் பண்ணினோம். தமிழ் தெரியாத பலர் செட்ல இருந்தாங்க. ஒவ்வொரு சீன் முடியும்போதும எல்லோரும் கைத்தட்டுவாங்க. அஜித் சார் ஃபுல் சீன் டயலாக் பேசி நடிச்சு முடிச்சார்னா கட் சொன்னதும் டப் டப் டப்னு கிளாப்ஸ் விழும். இப்படி ஸ்ரத்தா, அபிராமினு ஒவ்வொருத்தரும் நடிச்சு முடிச்சதும கிளாப்ஸ் விழும். அப்படி பாண்டேவுக்கு விழுந்த கிளாப்ஸ்ல அவர் திக்குமுக்காடிட்டார். அவரால் என்ன பேசுறதுனே தெரியலை. பாண்டேவுக்கு அவ்வளவு சந்தோஷம். அஜித் சாருக்கும் பாண்டேவுக்குமான கோர்ட் விவாதம் ரொம்ப நல்லா வந்திருக்கு.”

Ajith
Ajith

“அஜித்தைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசுவாங்க. நீங்க அவரை பக்கத்துல இருந்து கவனிச்சிருக்கீங்க. அஜித் எப்படி இருக்கார்?”

‘என்னடா இது, நாமளே கொஞ்சம் ஆணவமா இருக்கோம். இந்த மனிதர் இவ்வளவு எளிமையா இருக்காரேனு நம்மமேலயே நமக்கு வருத்தம் வந்துடும். அவரோட எளிமையை ஹேண்டில் பண்றதே நமக்குக் கஷ்டமா இருக்கும். போனதும் எழுந்து நின்னு, ‘உட்காருங்க சார்’ என்பார். நமக்குப்பதட்டமாயிடும். ‘வாங்க வினோத் உட்காருங்க’னு அவர் உட்கார்ந்துட்டே சொன்னாலும் நாம தவறா எடுத்துக்கப்போறதில்லை. ஆனால், அந்த மரியைதையைத் தரணும்னு நினைப்பார். இது டைரக்டரான எனக்கு மட்டுமில்லை, அங்கே இருக்கிற லைட்மேனுக்கும் அதே மரியாதைதான். அந்த சமநிலையை மெயின்டெயின் பண்ணுவார். சாப்பாடு விஷயத்திலும் அப்படியே, எல்லோரும் என்ன சாப்பிடுறாங்களோ அதே ஷூட்டிங் சாப்பாடுதான் அவருக்கும். அஜித் சார் ஸ்பாட்டுக்கு வந்து எல்லோர்கிட்டேயும் ஒரு ஹாய், ஹலோ சொன்னார்னா ஒட்டுமொத்த யூனிட்டுமே ஃபோகஸ்டா மாறிடும். அது மிகப்பெரிய பொறுப்பு. அதை அஜித் சாரோட பிரசன்ஸே பண்ணிடும். ஆமாம், கேள்விப்பட்டதைவிட நேர்ல பார்க்கும்போது அவர்மேல அதிகமான அபெக்ஷன்தான் வரும். இதுக்கெல்லாம் காரணம் அந்த எளிமை. எந்த விஷயத்தைப் பற்றியும் எந்தப் புரிதலும் இல்லாம எளிமையா இருந்தா, இங்கே எல்லோரும் ஏமாத்திட்டுப்போயிடுவாங்க. ஆனால், இவர் ஜீனியஸ். இப்படியான ஜீனியஸ்களாலதான் இப்படி எளிமையா இருக்க முடியும்ங்கிறது என் நம்பிக்கை.”

அஜித், போனி கபூர் இருவரும் படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்க?

பொதுவா அஜித் சார் தன் படங்கள்ல அடுத்தவங்க போர்ஷனைக்கூட பார்த்தது இல்லைனு கேள்விப்பட்டிருக்கேன். தன் போர்ஷனுக்கு டப்பிங் பண்ணி முடிச்சார்னா போயிடுவார்னு சொன்னாங்க. ‘நீங்க ஃபுல் படமும் பார்க்கணும் சார்’னு அவரை ரெக்வெஸ்ட் பண்ணினேன்.

போனி சாரோ, ‘உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ பார்க்கிறேன். நீங்க சொல்லாம ஒரு ஃபிரேம்கூட பார்க்கமாட்டேன்’னு சொன்னார். இப்படி முழுப் பொறுப்பையும் நம்மமேல வைக்கிறது பெரிய ரெஸ்பான்சிபிளிட்டி. அப்பப்போ நம்மைக் கண்காணிக்கிறாங்க, என்னனு கேக்குறாங்கன்னா, ‘உங்களோட தலையீடுதான் இதுக்குக் காரணம்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டு எஸ்கேப் ஆகுறது ஈஸி. ஆனா, இதில் அப்படி யாரோட தலையீடும் கிடையாது. அந்த ரெஸ்பான்சிபிளிட்டி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அதை என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணினேன். படம் பார்த்துட்டு போனி சார் ட்வீட்லாம் பண்ணினார். அஜித் சார் படம் பார்த்துட்டு கட்டிப் பிடிச்சுகிட்டார். அந்த அன்புதான் எனக்கான கிரெடிட்னு நினைக்கிறேன். இப்படி இந்த ப்ராஜெக்ட்டுக்கு நம்பிக்கைனா அது அஜித் சார்தான்.

Ajith
Ajith
Ananda VIkatan

“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க?”

“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு?”

“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க?”

“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க?”

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு