Published:Updated:

'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்!’ - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

`நேர்கொண்ட பார்வை’ - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News
`நேர்கொண்ட பார்வை’ - ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இது, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இது, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்குகிறார். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''

‘நேர்கொண்ட பார்வை’ - எப்படி வந்தது இந்த டைட்டில்?’’“இந்தப் படத்துக்கு நிறையத் தலைப்புகளைச் சொல்லி குழம்பிட்டு இருந்தோம். அது ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் போயிட்டு இருந்த சமயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் சிவா சார்ட்ட, ‘பிங்க்’ படத்தை ரீமேக் பண்ணும் விஷயத்தை அஜித் சார் சொல்லியிருக்கார். அப்போ உடனடியா, ‘படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’னு தலைப்பு வைங்க சார். நல்லாயிருக்கும்’னு சிவா சார் சொல்லியிருக்கார். அவர் சொன்ன தலைப்பை டிசைன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ‘அப்படின்னா என்ன அர்த்தம்’னு கேட்ட தயாரிப்பாளர் போனி கபூர் சாருக்கு பாரதியார் பாடல்களை அனுப்பிவெச்சோம். அதைக்கேட்டதும் அவருக்கும் இந்தத் தலைப்பு பிடிச்சிடுச்சு. சிவா சாருக்குதான் நன்றி சொல்லணும்!”

'மாஸ் ஹீரோக்கள் மேல நிறைய புகார்னு அஜித் ஃபீல் பண்ணார்!’
- இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

“ 'சதுரங்க வேட்டை’ ரிலீஸுக்குப் பிறகு அஜித் சாருக்குக் கதை சொல்ல இரண்டு வருடங்கள் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக நான் ரெடி பண்ணிவெச்சிருந்த நெகட்டிவ் ஷேட் உள்ள அந்தக் கதையைச் சொன்னேன். ‘ரொம்ப கமர்ஷியலா போயிட்டு இருக்கிறதாவும், நல்ல படம் பண்ணுவதில்லைனும் மாஸ் நடிகர்கள்மேல நிறைய புகார்கள் இருக்கு. அப்படியான புகார்கள் வராத அளவுக்கு ஒரு நல்ல படம் பண்ணலாம்னு இருக்கேன். அந்தவகையில், எனக்கொரு படம் பிடிச்சிருக்கு. அதை நீங்க ரீமேக் பண்றீங்களா’னு கேட்டார். ‘என்ன படம் சார்’னு கேட்டேன். ‘பிங்க்’னு சொன்னார். ‘பிங்க்’ படத்தை நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். அஜித் சாருக்கு வேற லெவல்ல ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம். ஆனா, டக்குனு ‘பிங்க்’ல அவரைப் பொருத்திப் பார்க்கிறது என் மனநிலைக்கே சிக்கலா இருந்தது. ‘இதுக்கு ரசிகர்கள் எப்படி ஒப்புக்குவாங்க, பிசினஸ் எப்படி இருக்கும்’னு நிறைய சந்தேகங்கள் அலையடிக்குது. உடனடியா என்ன பதில் சொல்றதுனு புரியாம தயங்கி நின்னேன்.

‘இந்தமாதிரி எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. தவிர, இப்படி யோசிக்கிற ஆளும் கிடையாது. ஸ்ரீதேவி மேடத்துக்கு கொடுத்த பிராமிஸை நிறைவேற்ற இந்தப் படம் பண்றீங்க. அந்தவகையில் இந்தப்படம் உங்களுக்கு ரொம்ப முக்கியமான படம். அதை நான் சொதப்பிடக்கூடாது. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. நான் யோசிச்சுச் சொல்றேன்’னு சொன்னேன். ‘நிறைய நேரம் எடுத்துக்கங்க. ஆனா, இதுதான் என் அடுத்த படம்’னு சொல்லிச் சிரிச்சார். உண்மையைச் சொல்லணும்னா, நான் லேசான அதிர்ச்சியில்தான் இருந்தேன். அதுல இருந்து மீளவே இரண்டு நாள் ஆச்சு. ஆனா, ‘இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ, சினிமாவில் நிறைய அனுபவம் உள்ள நடிகர். ஏன் அந்தப் படம் பண்ணணும்னு நினைக்கிறார்’னு நிறைய யோசனை.

அஜித் 'நேர்கொண்ட பார்வை' ஷூட்டிங்கில்
அஜித் 'நேர்கொண்ட பார்வை' ஷூட்டிங்கில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘தீரன்’ படத்துக்கு லொக்கேஷன் பார்க்க குஜராத்துக்குப் போகும்போது பஸ்ல ‘பிங்க்’ படத்தைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்துச்சு. எனக்கு இந்தி தெரியாது. ‘இது ஏதோ கோர்ட் ரூம் டிராமா. ஏதோ பேசுறாங்க’னு நினைச்சு பார்த்து முடிச்சேன். இப்படி எங்கேயோ, எப்போவோ பார்த்த ஒரு படம், திடீர்னு ஏதோ ஒரு பிணைப்பு மாதிரி நம் முன்னாடி வந்து நிக்குதே’ என்ற எண்ணம்தான் வந்துச்சு. பிறகு ‘பிங்க்’ படத்தை டிவிடியில் பலமுறை பார்த்தேன். படம் ரொம்ப எங்கேஜிங்கா இருந்தது. படம் இங்கே சூப்பரா வொர்க்அவுட் ஆகும். அமிதாப் சார் கேரக்டர்ல அஜித் சார் செமயா பொருந்துவார்னு தோணுச்சு. இப்படி, அவர் எடுத்த முடிவு சரியானதுதான்னு போகப்போக புரிஞ்சுது. ஆனா, இதை நம்மளால பண்ண முடியுமானு எனக்கு யோசனை. பிறகு நான் சாரின் மேனேஜர் சுரேஷ் சாரைக் கூப்பிட்டு, ‘நம்ம ஊருக்குத் தேவையான விஷயங்களைச் சேர்த்துப் பண்ணினால் இது செமையா செட்டாகும். ஆனா, நான் எமோட் பண்ற ஆளு கிடையாது- எல்லாத்தையும் கொஞ்சம் இன்ஜினியரிங்கா யோசிக்கிற ஆள். என்னால படத்தைப் பண்ணமுடியுமானு டவுட்டா இருக்கு’னு சொன்னேன். ‘அஜித் சாரை மறுபடியும் சந்திப்போம்’னு சொன்னார்.

சந்திச்சோம். ‘சார் முதல்ல இந்தப் படத்தை நான் எப்படி புரிஞ்சிருக்கேன்னு சொல்றேன். அது சரியானு பாருங்க’னு சொல்லிட்டு, ‘பெண்களை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிஞ்சுட்டு இருக்கோம். எப்படிப் பார்க்கணும், எப்படிப் புரிஞ்சுக்கணும். அதுதான் இந்தப் படம் கரெக்டா சார்’ என்றேன். ‘100 சதவிகிதம் சரி’ என்றார். 'இந்தப் படம் தமிழ்ச் சூழலுக்கு மாறுதானு பார்ப்போம் சார். நான் ஒரு வெர்ஷன் எழுதிப்பார்க்கிறேன்’னு சொன்னேன்.என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தைப் பெரிய சவாலாதான் பார்த்தேன். ஆனா, ‘இந்தமாதிரி ஒரு கதையை நாம யோசிக்கப்போறது இல்லை. இப்படியொரு சான்ஸ் தானாவே வருது. நீ எதுக்கு அதை விடுற. எல்லோரும் இந்தப் படத்தைப் பண்ணணும்னு ஆசைப்படும்போது, அதுல உனக்கு ஒரு ரோல் தானாவே கிடைக்குது. பண்ணிடு’னு தோணுச்சு!’’

#NKPVikatanExclusive
#NKPVikatanExclusive

“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க?”

“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு?”

“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க?”

“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க?”

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!.