Election bannerElection banner
Published:Updated:

நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

 நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே 
- இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive
நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களைத் தொடர்ந்து ‘நேர்கொண்ட பார்வை’யில் அஜித்தை இயக்குகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இது, இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக். ஆனந்த விகடனுக்காக வினோத்திடம் பேசியதிலிருந்து...''

நடிகர்-நடிகை தேர்வுதான் இதன் மெயின் கேம் என்பது ‘பிங்க்’ படம் பார்த்தவர்களுக்குப் புரியும். அந்தப் படத்துக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப்னு இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்-நடிகைகளைத் தேர்வு பண்ணியிருந்தாங்க. லைவ் சவுண்ட்ல ஷூட் பண்ணியிருந்தாங்க. இஙகே லைவ் சவுண்ட் பண்ணணும்னா, எல்லோருக்கும் சரியா தமிழ் பேச வரணும். அப்போ நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சவங்களை பிடிப்போம்னு தேடினோம். தமிழும் தெரியணும், நடிக்கவும் செய்யணும்னு தேடும்போது ரொம்ப கஷ்டப்பட்டோம். ஏற்கெனவே எடுத்த படம்ங்கிறதால எல்லாத்தையுமே ஒப்பிடுவாங்க. அஜித் சாரும் ‘எந்தக் கேரக்டருக்கு யாரை வேணும்னாலும் தேர்வு பண்ணிக்கங்க. நான் எதிலும் தலையிடமாட்டேன்’னு ஆரம்பத்துலயே தெளிவா சொல்லிட்டார்.

‘பிங்க்’ படத்தில் கதையோட முரணே டாப்ஸிமேலதான் தொடங்கும். தமிழ்ல அந்தக் கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிஷன் பண்ணினோம். அபபோ, ‘இது நம்ம பகுதி கதை கிடையாது. ஆனா, கதை ரொம்ப சென்சிபுளா இருக்கு. இதில் நடிக்கிறவங்க, நாம சொல்ற எமோஷனை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணினவங்களா இருக்கணும், இல்லைனா அதைப் புரிஞ்சுக்கிட்டு அதை நடிப்புல கொண்டுவர்றவங்களா இருக்கணும். என்ன சொல்றோம்ங்கிறதே புரியலைனா கஷ்டம்‘ங்கிறது எனக்குப் புரிஞ்சுது. லுக் டெஸ்ட்ல ஓகேயான ஒவ்வொருததர்கிட்டேயும் அவங்க பின்னணி, ஆர்வம், என்னமாதிரியான சினிமாக்கள் பிடிக்கும்னு தனித்தனியா பேசினோம். அந்த உரையாடலிலேயே நாம பேசுறதைப் புரிஞ்சிக்கிற சென்சிபுளான ஆள்களா பார்த்துத் தேர்வு பண்ணினோம். அப்படித்தான் ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளே வந்தாங்க.

 நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே 
- இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive
நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

“ஒவ்வொருத்தவங்களும் எப்படி நடிச்சிருக்காங்க?”

“வேற வழியே இல்லை, நல்லா நடிச்சே ஆகணும். ஒரு ஹின்ட் கொடுத்தாப் போதும், புரிஞ்சுப்பாங்க. ஏன்னா, எல்லோருமே பிரில்லியன்ட். ஒவ்வொருத்தரும் சினிமா மட்டுமில்லாம விதவிதமான ஆக்டிவிட்டீஸ்ல இருக்கிறவங்களா இருந்தது கூடுதல் பலமா இருந்துச்சு. ‘ஒரிஜினல்ல எல்லோரும் நல்லா நடிச்சிருந்தாங்க. அதைவிட சூப்பரா பண்ணிடணும். தன்னால எதுவும் குறைஞ்சிடக்கூடாது’னு பயத்தோடவே பண்ணினாங்க. டப்பிங்ல படம் பார்த்துட்டு, அவங்க பண்ணினதை அவங்களே வியந்து பார்த்து, ‘சூப்பரா பண்ணியிருக்கோம்ல, செமயா வந்திருக்குல’னு சந்தோஷப்பட்டாங்க. அவங்களோட அந்த சந்தோஷம்தான் உங்க கேள்விக்கான பதில்.”

 நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே 
- இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive
நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

ரங்கராஜ் பாண்டே எப்படி நடிச்சிருக்கார். அவர் நடிச்சதைப் பற்றி அஜித் என்ன சொன்னார்?

அரசு தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கு ஆளே கிடைக்கல. ‘ரங்கராஜ் பாண்டே எப்படிடா இருப்பார்’னு சொன்னதும் என் உதவி இயக்குநர்கள் முகங்கள்ல அப்படியொரு பிரகாசம். ஆனால், எங்களுக்கு இரண்டு பிரச்னைகள். அஜித் சாருக்கு அரசியல்னாலே ஆகாது. ஆனா, பாண்டே முழுக்க முழுக்க அரசியல். ‘இதை எப்படி அஜித் சார்கிட்ட ஓகே வாங்குறது’னு யோசனை. முதல்ல போனி கபூர் சார்கிட்ட கேட்டேன். ‘செண்ட் சம் வீடியோஸ்’னு கேட்டார். பாண்டேயோட சில விவாத நிகழ்ச்சிகளின் விடியோஸை அனுப்பினேன். பார்த்துட்டு, ‘ஹீ ஈஸ் வெரிகுட்’னு பதில் வந்தது.

அஜித் சார்கிட்ட கேட்டு அவர் ‘ஓகே’னு சொன்னபிறகு, ‘எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை’னு பாண்டே சொல்லிட்டார்னா என்ன பண்றதுனு யோசனை. பிறகு பத்திரிகையாளரும் நண்பருமான மை.பா.நாராயணன் மூலமா பாண்டேவிடம் பேசினேன். ‘தீரன் பார்தேன். க்ரைம் செய்திகளை வெச்சு ஒரு படம். எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, ‘சதுரங்க வேட்டை’ பார்க்கலை. ஆனால் ரிலீஸாகி நாலஞ்சு வருடங்களுக்குப் பிறகும் அதைவெச்சு வர்ற மீம்ஸை கவனிக்கிறேன். இந்த ஆஃபருக்கு நன்றி. வேலைச்சூழல் எல்லாத்தையும் யோசிச்சு சொல்றேன்’னு சொன்னார். இந்த இடைவெளியில போனி சார் அஜித் சார்கிட்ட பாண்டேவைப் பற்றி சொல்லியிருக்கார். ‘முக்கியமான கேரக்டர். அவர் பண்ணினா இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கும். ஓகே. பேசுங்க’னு அவரும் சொல்லிட்டார். பிறகு, பாண்டே சார்தான் பார்த்துட்டு இருந்த சேனல் வேலையிலிருந்து விலகின பிறகு படத்துல நடிக்க சம்மதிச்சார். இதுக்கிடையில் ‘சதுரங்க வேட்டை’ படத்தையும் அவர் பார்த்திருந்தார். ‘நாம பண்ணுவோம்’ னு வந்தார்.

அரசியல்னாலே பிடிக்காத ஒருத்தர், அரசியல் மட்டுமே பிடிச்ச இன்னொருத்தர். இருவரும் சேர்ந்தா என்ன பேசுவாங்கனு எனக்கே சுவாரஸ்மா இருந்தது. ஆனா, நான் இருக்கும்போது அவங்க அரசியல் பேசினது இல்லை. மற்றபடி, சினிமா பற்றிப் பேசுவாங்க. இது எல்லாத்தையும் தாண்டி, ‘எந்த ஊர், மனைவி என்ன பண்றாங்க, பசங்க பேர், என்ன படிக்கிறாங்க’னு ஃபேமிலி பற்றிதான் அஜித் சார் அதிகம் பேசுவார். ஒரே ஒருமுறை சொல்லிட்டீங்கனா போதும். மறுபடியும் எத்தனை வருடம் கழிச்சுப் பார்த்தாலும், குழந்தை பெயரைச் சொல்லி, ‘நல்லாயிருக்காங்களா’னு விசாரிப்பார். அவரைப் பொருத்தவரை ஒவ்வொருத்தவங்களும் நாட்டோட சிட்டிசன். தங்களோட கடமைகளை சரியா பண்ணினா எந்தப் பிரச்னையும் இங்கே வராது. இதுக்கு ஃபேமிலிதான் அடிப்படை. நம் பெஸ்ட் ஆக்டிவிஸமே, பொறுப்புகளை எடுத்துக்கிறதுதான். அது குடும்பத்தின் மீதான பொறுப்புல இருந்துதான் தொடங்கணும். அவரோட உரையாடல் இப்படித்தான் இருக்கும்.”

 நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே 
- இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive
நல்லா நடிச்சே ஆகணும் ; திக்குமுக்காடிய பாண்டே - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி #NKPVikatanExclusive

“வித்யாபாலன், சில தமிழ்ப் படங்களிலிருந்து விலக்கப்பட்டும், சில படங்களிலிருந்து அவங்களே விலகியும் இருக்காங்க. அவங்க எப்படி இந்தப் படத்துக்குள் வந்தாங்க?”

“ ‘பிங்க்’ படத்தில் மாஸ் கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் கிடையாது. ஆனால், இதில் அஜித்துக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“ ‘அமிதாப் கேரக்டரில் அஜித். அந்தக் கதாபாத்திரம் இவருக்கு எப்படிப் பொருந்தியிருக்கு?”

“யுவன்ஷங்கர் ராஜா, நீரவ்ஷான்னு இன்ட்ரஸ்டிங்கான டீம். என்ன பண்ணியிருக்காங்க?”

“அஜித்தின் அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க. அந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கிறீங்க?

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வாரம் வெளியாகியிருக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு