Published:Updated:

ஏட்டிக்குப் போட்டி - கல்கி எழுதுவது... #AppExclusive

Kalki Krishnamurthy
News
Kalki Krishnamurthy
Vikatan

1928-ல இதை எழுத 'கல்கி'க்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ...!!

ஏட்டிக்குப் போட்டி - "கல்கி" எழுதுவது

விதவையில்லாதார் சகாயத்துக்கென்று ஏன் ஒரு சங்கமோ சபையோ சமாஜமோ ஏற்படுத்தக்கூடாது? இந்த எண்ணம் திடீரென்று நேற்று என் உள்ளத்தில் உதயமாயிற்று. ஒரு பத்திரிகையில் விதவைகளின் நிலைக்கு இரங்கி ஒரு பரோபகாரி எழுதியிருந்த கடிதத்தைப் படித்துக் கொண்டே வருகையில் இந்த எண்ணம் பீறிக்கொண்டு எழுந்தது. விதவைகளின் பரிதாப நிலையும், அவர்களுக்குள் கஷ்டங்களும் எனக்குத் தெரியாமலில்லை; அவற்றை நினைந்து நினைந்து குடங்குடமாகக் கண்ணீர் வடித்திருக்கிறேன். ஆனால், முன்னமே சொன்னதுபோல், நேற்று எக்காரணத்தினாலோ திடீரென்று விதவையில்லாதார்மீது எனக்கு இரக்கம் பிறந்தது. அன்பர்களே! இதுபோன்ற விஷயங்களில் காரணம் என்ன, காரியம் யாது என்று நோண்டிக் கேட்கக்கூடாது; தெரியுமல்லவா? கைம்பெண்கள் என்றால் ஏதோ கிள்ளுக் கீரைபோல் சிலர் பேசுகிறார்கள்.

ஆயினும் அவர்களுடைய அபாரமான வல்லமையைப்பற்றி யாரேனும் சிந்தித்ததுண்டா? ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள் அவர்கள்தான் என்று கூறினால் அது 100 பங்கும் உண்மையேயல்லாது வேறில்லை; நம்பமாட்டீர்கள்; நல்லது கேளுங்கள்...

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP