Published:Updated:

``ராக் கையிலிருந்த காளை மறையலாம். ஆனால், என் கையில் இருக்கிற..." - ராக் ரசிகனின் வெறித்தன வாழ்த்து

Dwayne `The Rock' Johnson

"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்..." என வாயில் வந்ததைக் கத்திவிட்டு, புருவம் உயர்த்தி முறைத்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இந்தக் காலண்டரும், கால்குலேட்டரும்தான் 15 ஆண்டுகள் என கணக்கு சொல்கின்றன.

``ராக் கையிலிருந்த காளை மறையலாம். ஆனால், என் கையில் இருக்கிற..." - ராக் ரசிகனின் வெறித்தன வாழ்த்து

"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்..." என வாயில் வந்ததைக் கத்திவிட்டு, புருவம் உயர்த்தி முறைத்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இந்தக் காலண்டரும், கால்குலேட்டரும்தான் 15 ஆண்டுகள் என கணக்கு சொல்கின்றன.

Published:Updated:
Dwayne `The Rock' Johnson

"இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்..." என வாயில் வந்ததைக் கத்திவிட்டு, புருவம் உயர்த்தி முறைத்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. இந்தக் காலண்டரும், கால்குலேட்டரும்தான் 15 ஆண்டுகள் என கணக்கு சொல்கின்றன. தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஊரில் பட்டம், பம்பரம், கோலி, கிரிக்கெட் என எல்லாவற்றுக்கும் ஒரு சீசன் இருந்தது. WWE தவிர. ஏனெனில், எல்லா நாளும் எங்களுக்கு WWE நாள்தான்!

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson

பள்ளி முடிந்ததும் மல்யுத்தம் தொடங்கிவிடும். விளையாட்டாக நடக்கும் அந்த நாடகச் சண்டையில், யார் யார் எந்தெந்த ரெஸ்ட்லர் என்பதில்தான் நிஜ சண்டையே நடக்கும். எங்களில் உயரமாக இருப்பவன் அண்டர்டேக்கர், குண்டாக இருப்பவன் பிக் ஷோ, தயங்காமல் வாயில் தண்ணீர் உற்றி துப்புபவன் ட்ரிபிள் ஹெச் என முடிவாகிவிட, தி ராக் மற்றும் ஸ்டோன் கோல்டு பாத்திரங்களுக்கு போட்டா போட்டி நடக்கும். ஆனாலும், தி ராக் பாத்திரத்தை எனதாக்கிக்கொள்ள ஒரு யுக்தி வைத்திருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராக்கின் வலது புஜத்தில் இருப்பதுபோல் ஒரு காளையின் முகத்தை என் கையிலும் மருதாணியால் வரைந்துகொள்வதுதான் அந்த யுக்தி. மற்றவர்களும் வேறு வழியின்றி ஒரு மனதாய் ஒப்புக்கொள்வார்கள். `டேய் இன்னைக்காவது நான் ராக்கா இருக்கேன்டா' என யாராவது கேட்டால், `அப்போ காளைமாடு படத்தைக் காட்டு, இல்லைனா ராக் மாதிரி ஜட்டியோட வா' என கலாய்த்து அனுப்பியதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. அதைவிட, என் ஒல்லியான கையில் உக்கிரமாக வரையப்பட்ட காளைமாடோ... காய்ச்சல் வந்த கன்றுக்குட்டிபோல் இருந்ததை நினைத்தால் இன்னும் சிரிப்பாக இருக்கிறது.

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson

என்னவோ, அவரை அவ்வளவு பிடிக்கும்! கங்கா, சந்திரமுகியா நின்னா, சந்திரமுகியா நடந்தா என்பதுபோல் என்னை ராக்காக நினைத்துக்கொண்ட நாள்கள் எல்லாம் அற்புதமானவை. தேங்காய் சில் வாங்குவதற்கு தெருவில் நடந்துபோகும் நேரங்களில்கூட மண்டைக்குள் ராக்கின் தீம் மியூசிக் ஒலிக்க, ராக்கைப் போலவே ஒருவிதமாய் குதித்துக் குதித்து நடந்துசெல்வேன். காயலாங்கடையில் காசு கொடுத்து வாங்கிவந்த கார்டுபோர்டு அட்டையில், சாம்பியன்ஷிப் பெல்ட் செய்துகொண்ட பிறகு, `ராக் பைத்தியம்' உச்சத்துக்குப் போனது. கல்யாண மண்டபங்களின் முன் விற்கும், 10 ரூபாய் கூலிங் கிளாஸை வாங்கி மாட்டிக்கொண்டு, புருவம் உயர்த்தி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை இப்போது பார்த்தாலும் ஒருவித சுறுசுறுப்பு ரத்தத்தில் ஜிவ்வென சுண்டி மறையும். அதன் காரணம், ராக்கின் உடம்பில் ஓடிய ரத்தம் அப்படி!

1972-ம் ஆண்டு, கலிஃபோர்னியாவில் மல்யுத்த வீரர் ராக்கி ஜான்சனுக்கும் அடா ஜான்சனுக்கும் பிறந்தார், டுவைன் டக்ளஸ் ஜான்சன். அதுதான் ராக்கின் இயற்பெயர். அடா ஜான்சனின் தந்தை பீட்டர் மைவியாவும் புஜபல பராக்கிரமசாலி. இதனால், சிறுவயதிலேயே மூன்று வேளையும் பீமபுஷ்டி அல்வா தின்றதுபோல் புஷ்டியாக இருந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே ஆறேகால் அடி உயரம் கொண்டிருந்த டுவைனை, `யாரோ அண்டர்கவர் போலீஸ்' என நினைத்துப் பயந்திருக்கிறார்கள் சக மாணவர்கள். டுவைனின் உறவினர்களான ரிக்கிஷி, ஒகேசுனா, ரோஸி, ஆஃபா ஆகியோர் WWE ரிங்கினுள் கலக்கியதைப் பார்த்ததும், இவருக்கும் ரெஸ்ட்லர் ஆகும் ஆசை தொற்றிக்கொண்டது. ஆனால், அதிலொரு சிக்கல்.

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson

படிப்பிலும் கெட்டி, அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டிலும் சுட்டியான டுவைனை வைத்து, வேறொரு கனவு கண்டிருந்தார் அவரது அப்பா ராக்கி ஜான்ஸன். இதனால், டுவைனின் ரெஸ்ட்லிங் ஆர்வம் அவருக்கு கோபம் உண்டாக்கியது. பிறகு எப்படியோ சம்மதித்து, அதற்கான பயிற்சியும் அளித்தார். 1 வருடம்தான் பயிற்சி, ராக்கி மைவியா என்கிற பெயரில் WWE ரிங்குக்குள் காலடி எடுத்துவைத்தார். முதல் சண்டையே வெற்றி! அரங்கமே `ராக்கி...ராக்கி...' என கோஷமிட்டது. `சாதுவான உடல்மொழி, சரத்பாபுவைவிட சாந்தமான முகம்' என இருந்த ராக்கியை, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்தனர். `நல்லவனா இரு, ரொம்ப நல்லவனா இருக்காத' என வறுத்தனர். அதில் உச்சகட்டமாக, ஒரு மேட்சின்போது `டை, ராக்கி டை'' (செத்துரு,ராக்கி செத்துரு) என கோஷமிட்டார்கள் ரசிகர்கள். பாவம், உடைந்துபோனார் அவர்.

அதன் அடுத்த மேட்சிலேயே காயம் ஏற்பட, ஐந்து மாதங்கள் ஓய்வெடுக்கச் சென்றார். அந்த ஐந்து மாதகால ஓய்வு, ராக்கி மைவியாவை வேறொரு ஆளாக மாற்றியிருந்தது. ராக்கி மைவியா, தி ராக்காக மாறினார். அதன்பிறகு, நடந்ததெல்லாம் ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கான பெரும் வரலாறு. அப்படி ஒரு புத்தகம் எழுதி, அது நியூயார்க்கின் பெஸ்ட் செல்லர் ஆனது இன்னொரு வரலாறு. தி ராக், சூப்பர் ஸ்டாராக மாறியதில் ஸ்டோன் கோல்டின் பங்கும் மிகப்பெரியது. இருவருக்கும் இடையே நடந்த ஒவ்வொரு மேட்சும், அட்டகாசமானவை. அப்போது, இதனாலேயே எனக்கு ஸ்டோன் கோல்டைப் பிடிக்காது. ஸ்டோன் கோல்டு பிரென்ச் பியர்ட் வைத்திருந்ததால், `பஞ்சதந்திரம்' படமும் பிடிக்காது. ஸ்டோன் கோல்டின் கடைசி மேட்சில், ராக்கிடம் தோற்றுப்போனார். அப்போது, ரிங்கில் வீழ்ந்துகிடந்த ஸ்டோன் கோல்டின் காதருகில் சென்று ராக் ஏதோ சொல்வார். அது என்னவென்று, சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன்.

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson
I thank you (Stone Cold ) so much for everything that you've done for me. I love you!
The Rock

அதன் பிறகு கொஞ்ச நாளிலேயே, தி ராக்கும் ஓய்வுபெற்றார். ஹாலிவுட்டில் படம் நடிக்கப்போகிறார் என்றார்கள். முதல் படத்திலேயே 5.5 மில்லியன் டாலர்கள் அவருக்கு சம்பளம். முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்கிய ஒரே நடிகர், டுவைன் `தி ராக்' ஜான்சன் மட்டும்தான். ஆனால், எந்த ரசிகனுக்கும் இது சந்தோஷத்தைத் தரவில்லை. WWE விட்டு ராக் செல்கிறார், இனி சண்டையிட மாட்டார் என்கிற துக்கம்தான் தொண்டையை அடைத்தது. ராக் நடிக்கும் படங்கள் ஃப்ளாப் ஆகவேண்டும். அப்போதுதான் அவர் WWE-க்கு மீண்டும் வருவார் என்றெல்லாம் நினைத்ததுண்டு. நிஜத்தில், பாக்ஸ் ஆஃபீஸில் கிங்காக அவர் உயர்ந்துகொண்டிருந்தார். 2016-ம் ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகர், டுவைன் ஜான்சன்.

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson

அவர் முழுநேர மல்யுத்தத்தை விட்டுச் சென்றபிறகும், நாங்கள் விளையாடிக்கொண்டுதான் இருந்தோம். அப்போது, ராக் கதாபாத்திரத்திற்கு போட்டியே இருக்காது. ஜான் சினாவுக்குதான் அடித்துக்கொண்டிருப்பார்கள். மருதாணியில் காளை படம் வரையாமலே, எனக்கு ராக் கதாபாத்திரம் கிடைத்துக்கொண்டிருந்தது. எல்லா மேட்சிலும் ராக், கோல்டுபெர்க்கிடம் ஸ்பியர் வாங்கி தோற்க வேண்டும் என்பது விதி. சந்தோஷமாகவே தோற்றுக்கொண்டிருந்தேன். இப்போதும், தலையணைகளுக்கு ராக் பாட்டம் போடுவதும், பீப்பிள் எல்போ போடுவதுபோல் இல்லாத கிளவுஸைக் கழற்றி, கைகளை ஆட்டுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ராக், நடிக்கும் படங்களை நான் பார்ப்பதில்லை. ராக்கை, டுவைன் ஜான்சனாகப் பார்ப்பதில் விருப்பமில்லை. வயது வந்துவிட்டது, பக்குவம் அடைந்துவிட்டோம். அது "இஃபாசல் வாத்த ராக்கிஸ் குக்கிங்..." இல்லை, "If you smell what the Rock is cooking" என்பது புரிந்தது. `பஞ்சதந்திரம்' பிடிக்க ஆரம்பித்துவிட்டது. `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்கள்'தான் பிடிக்காமல் போய்விட்டது. அவர் புஜத்திலிருந்த காளை மாடு மறைந்திருக்கலாம். என் கையில் மருதாணி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

Dwayne `The Rock' Johnson
Dwayne `The Rock' Johnson
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், தி ராக்! டுவைன் ஜான்சனுக்கு அடுத்த ஆண்டு எழுதிவிடுவோம்...