Published:Updated:

ஆஸ்திரேலிய ஓப்பன் வென்ற நவோமி ஒசாகா... தொடரும் கிராண்ட்ஸ்லாம் வேட்டை!

Naomi osaka
Naomi osaka

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை அரையிறுதியில் ஓசாக வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் ஜெனிஃபர் பிராடியைத் தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் 23 வயது நவோமி ஒசாகா.
நவோமி ஒசாகா
நவோமி ஒசாகா

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் விளையாடிய ஜப்பானின் நவோமி ஒசாகா (Naomi osaka) தன்னை எதிர்த்து ஆடிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை (Jennifer brady) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி தன்னுடைய நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதற்கு முன்னர் அறையிறுதியில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை இவர் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

''மன அழுத்தம் எனக்கு ஏன் வந்தது?'' - மனம் திறந்த கோலி!
பிராடி ஜெனிபர்
பிராடி ஜெனிபர்

25 வயதாகும் ஜெனிபர் பிராடிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி. நவோமி ஒசாக இதற்கு முன்னர் ஆடிய அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டத்தை வென்றிருக்கிறார். இது இவருடைய நான்காவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். இந்த போட்டியிலும் பட்டத்தை வென்று, விளையாட்டு வரலாற்றில் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். இதற்கு முந்தைய வருடங்களில் இரண்டு அமெரிக்க ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஒரு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு