Published:Updated:

`ஒய் திஸ் கொலவெறி அட் பாண்டியா ஸ்டுடியோ' - தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த `பாண்டியா பிரதர்ஸ்'!

`ஒய் திஸ் கொலவெறி' பாடலை இந்திய கிரிக்கெட் அணியில் சகோதரர்களாக கலக்கி வரும் `பாண்டியா பிரதர்ஸ்' மீண்டும் வைரலாக்கியுள்ளனர்.

பாண்டியா பிரதர்ஸ்
பாண்டியா பிரதர்ஸ்

ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு அறிமுகம் தேவையில்லை எனச் சொல்லலாம். தனுஷின் `3' படத்தில் இடம்பெற்றிருந்த இந்த பாடல் படம் வெளிவரும் முன்னே இணையத்தில் சக்கைபோடுபோட்டது. தமிழ் ரசிகர்களைக் கேட்க வைத்ததில் ஆரம்பித்து, வெளிநாடு வரை இந்தப் பாடல் ஃபேமஸ். `சூப் சாங்’, `சூப் பாய்ஸ்’ போன்ற வார்த்தைகள் எல்லாம் அந்தச் சமயத்தில்தான் டிரெண்டானது. இந்த பாடல் ட்ரெண்ட் ஆனதால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை பாராட்டு பெற்றார் தனுஷ். உலகம் முழுதும் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, 190 மில்லியன் பார்வைகளைக் கடந்த அதே தனுஷின் `மாரி 2’ படத்தின் `ரௌடி பேபி’ இதை ஓவர்டேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒய் திஸ் கொலவெறி
ஒய் திஸ் கொலவெறி

இதற்கிடையே, இதே `ஒய் திஸ் கொலவெறி' பாடலை இந்திய கிரிக்கெட் அணியில் சகோதரர்களாக கலக்கி வரும் `பாண்டியா பிரதர்ஸ்' மீண்டும் வைரலாக்கியுள்ளனர். இருவரும் இந்த பாடலை பாடி வீடியோவை குர்னால் பாண்டியா தனது டுவிட்டர் பக்கத்தில், ``பாண்டிய மியூசிக் ஸ்டுடியோவில் ஒய் திஸ் கொலவெறி'' எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே தமிழ் ரசிகர்கள் லைக்குகளை தட்டிவிட சில மணிநேரங்களிலேயே 13,000 லைக்ஸ், 2,900 ரீட்விட் என வைரலாகி வருகிறது.