Published:Updated:

ஹாலிவுட் பட பாணியில் விர்ச்சுவல் விளையாட்டு.. நிஜ வீரர், வீராங்கனைகளே விளையாடிய சுவாரஸ்யம்!

Mario Tennis Aces
Mario Tennis Aces

நினைத்தது போலவே போட்டியில் வென்றபிறகு, `நிஜ டென்னிஸ்ல கூட நான் இவ்ளோ பதற்றமானது இல்ல. சரியான கூத்து! அட்டிசன் ரேதான் அடிச்சு நொறுக்கிட்டாங்க" என்றார் மகிழ்ச்சியாக.

ஈ சாலா ஐபிஎல் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்ன செய்ய போகிறார்கள் புரியவில்லை. இந்த ரணகளத்திலும் செரீனா, வீனஸ், ஷரபோவா போன்றோர் சேர்ந்து டென்னிஸ் விளையாடியிருக்கிறார்கள். பயப்படாதீர்கள் மக்களே, அவரவர் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வீடியோ கேம் வழியாக விர்ச்சுவல் உலகத்தில்தான் விளையாடியிருக்கிறார்கள். நின்டென்டோ நிறுவனத்தின் `மேரியோ டென்னிஸ் ஏசஸ்' எனும் வீடியோ கேமின் கதாபாத்திரங்களாக டென்னிஸ் வீரர்களும் அவர்களின் இணையர்களாக பிரபலங்களும் இணைந்து விளையாடினர். செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, டெய்லர் ஃப்ரிட்ஸ், கெவின் போன்ற டென்னிஸ் வீரர், வீராங்கனைகளோடு கிகி ஹாடிட், அட்டிசன் ரே, ஹைலி பெய்பர் போன்ற மீடியா பிரபலங்கள் இந்த ஆன்லைன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றனர்.

Mario Tennis Aces
Mario Tennis Aces

நடந்துமுடிந்த போட்டியில், ஃப்ரிட்ஸ் - அட்டிசன் ரே இணை, டைட்டிலையும் அதன் பரிசாக 1 மில்லியன் டாலரையும் வென்றனர். பங்கேற்ற மற்ற போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக 25,000 டாலர்கள் வழங்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த பணமும், அப்படியே தொண்டு நிறுவனத்துக்குப் போய் சேரும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டார்கள். ``நான் நிறைய வீடியோ கேம்கள் விளையாடிருக்கேன். விர்ச்சுவலா விளையாடுற தடகள வீடியோ கேம்களை இப்போ நிறைய பார்க்கமுடியுது. நான் மேரியோ டென்னிஸ் விளையாடியது கிடையாது. ஆனால், இந்த போட்டியில ஜெயிக்கணும்னு வெறித்தனமா காத்திருக்கேன்" என சில நாள்களுக்கு முன் பேசியிருந்தார் ஃப்ரிட்ஸ். நினைத்தது போலவே போட்டியில் வென்றபிறகு, `நிஜ டென்னிஸ்ல கூட நான் இவ்ளோ பதற்றமானது இல்ல. சரியான கூத்து! அட்டிசன் ரேதான் அடிச்சு நொறுக்கிட்டாங்க" என்றார் மகிழ்ச்சியாக. ரெடி ப்ளேயர் ஒன்..!

அடுத்த கட்டுரைக்கு