Published:Updated:

அமெரிக்காவில் ஈழத்தின் குரல்!

Web series
பிரீமியம் ஸ்டோரி
News
Web series

Web Series - NETFLIX

இணை அலைவரிசை படைப்புகள்

Sex Education (நெட்ஃபிளிக்ஸ்) I am Not Okay With This (நெட்ஃபிளிக்ஸ்) Call me By Your Name - திரைப்படம் BoyHood - திரைப்படம்.

Web series
Web series

குட்டி இன்ட்ரோ!

ஹைஸ்கூல் வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனுஷ னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் போலதான். ஒவ்வொரு வருக்கும் மாறுபடும். அதிலும் அமெரிக்காவில் சிறுபான்மையினரின இந்தியர்கள், சீனர்களுக்குப் பள்ளிக் காலம் என்பது பல சவால்களைக் கொண்டதாக இருக்கும்.

Web series
Web series

தேவி விஷ்வகுமாரின் தந்தை இறந்துவிட, அதன் அதிர்ச்சியில் அவளின் இரு கால்களும் செயலிழந்துவிடுகின்றன. வீல் சேரிலேயே முடங்குகிறது அவளது பள்ளிக்காலம். இதனால் கேலிக்கு உள்ளாகும் தேவி, புதுக் கல்வியாண்டைத் தனதாக்கப் பள்ளியின் அழகான மாணவனை டேட் செய்ய முயற்சி செய்வதுதான் கதை. கண்டிப்பான அம்மா; பிடிக்கவே பிடிக்காத உடன் படிக்கும் புத்திசாலிப் பையன், சீனியர் கிரஷ், ஒட்டிக்கொள்ளும் உறவினர்கள் என நாம் பார்த்துப் பழகிய கதாபாத்திரங்களுக்கு அமெரிக்க முலாம் பூசி அழகுபார்க்குகிறது இந்த ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (never have I ever).

ஸ்டார்ஸ்

இதில் தேவியாக நடித்திருப்பவர், 18 வயதான மைத்ரேயி ராமாகிருஷ்னன். ஈழப் போர்ச் சூழலில், கனடாவுக்குப் புலம்பெயர்ந்தது மைத்ரேயியின் குடும்பம். மைத்ரேயிக்கு அனிமேட்டர் ஆவதுதான் கனவாம். சட்டென ஆசை சினிமாப் பக்கம் திரும்ப, முதல் தொடரிலேயே உலக கவனம் பெற்றிருக்கிறார். நெவர் ஹேவ் ஐ எவர் தொடரின் கிரியேட்டர் மிண்டி காலிங். வீர மிண்டி சொக்கலிங்கம் என்பதைத்தான் க்யூட்டாக காலிங் எனக் கவுண்டமணி ஸ்டைலில் மாற்றிக்கொண்ட தமிழ் வம்சாவளிப் பெண் இவர். தொடரை நமக்கு அவரது வாய்ஸ் ஓவரில் தருகிறார், மூத்த டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோ.

லைக்ஸ்

Web series
Web series

இந்திய சீன நடிகர்களை அவர்களின் மார்க்கெட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த ஆங்கிலத் தொடர்களுக்கு மத்தியில், அதன் முதன்மைக் கதாபாத்திரம் ஒரு ஈழத்தமிழ்ப் பெண் என்பது சிறப்பு. தொடரின் பேசுபொருள் தமிழ்ப் பெண்ணைப் பற்றியதெனப் பார்த்ததும் க்ளிக் செய்ய வைக்கிறது இந்தத் தொடர். ஹை ஸ்கூல் களத்தில் இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கை, அமெரிக்கப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன எனச் சொல்கிறது இந்தத் தொடர். தமிழ் வம்சாவளிகளின் குடும்பம் என்றாலும், வீட்டிலும் ஆங்கிலமயம்தான். அதனாலேயே ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் என்னம்மா, கண்ணம்மா, தக்ளி சாம்பார், பெரிப்பா போன்ற வார்த்தைகள் க்யூட். பத்து எபிசோடுகள் ஒவ்வொன்றும் 30 நிமிடங்களே என்பதால் ஜாலியாக வீட்டில் அமர்ந்து டின்னருடன் சீரிஸுக்கும் குட்பை சொல்லலாம்.

டிஸ்லைக்ஸ்

கதை முழுக்கவே ஏகப்பட்ட `இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்’ டைப் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. பள்ளிக் குழந்தைகளின் காட்சிகள்தான் என்றாலும் யூதர்கள், நாஜிக்கள், ரஷ்யர்கள் என எல்லா நாட்டு மக்களையும் சகட்டுமேனிக்கு நக்கல் அடித்திருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. முதல் காட்சியில் சண்டை போடும் நபர்கள், இறுதிக் காட்சி யில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வார்கள் என்னும் ஆயிரம் ஆண்டுக்கால க்ளிஷேக்கு `நெவர் ஹேவ் ஐ எவரு’ம் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவில் ஈழத்தின் குரல்!