Published:Updated:

OTT கார்னர்

Love at First Kiss - Movie
பிரீமியம் ஸ்டோரி
News
Love at First Kiss - Movie

நாயகனிடம் ஒரு விநோத சக்தி இருக்கிறது. அவன் எந்தப் பெண்ணிற்கு முத்தம் கொடுத்தாலும் அவர்களின் காதல் உறவின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது அவனுக்குத் தெரிந்துவிடும்.

Gulmohar - Movie
Gulmohar - Movie
OTT கார்னர்

Gulmohar - Movie

34 வருடங்களாகத் தாங்கள் வாழ்ந்த ‘குல்மொகர்' வீட்டை விற்றுவிட்டு அப்பார்ட்மென்ட் வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது பத்ரா குடும்பம். குடும்பத் தலைவி ஷர்மிளா தாகூர், தான் இனி கூட்டுக் குடும்பத்துடன் வாழப்போவதில்லை என்றும், பாண்டிச்சேரியில் தனி வீட்டில் வசிக்கப்போவதாகவும் அறிவிக்கிறார். இதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும், பெரிய குடும்பம் புதைத்து வைத்திருக்கும் ரகசியங்களும்தான் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் கதை. 12 வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் ஷர்மிளா தாகூர் தன் அட்டகாச நடிப்பால் நிறைவு தருகிறார். மனோஜ் பாஜ்பாய் - சிம்ரன் ஜோடி உணர்வுபூர்வமான நடிப்பால் நெகிழச் செய்கின்றனர். மகனாக சுரஜ் சர்மா, கௌரவ வேடத்தில் அமோல் பாலேகர் ஸ்கோர் செய்கின்றனர். எண்ணற்ற கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்கள் எனப் படம் முழுக்க நுண்ணுணர்வுகள் அட்டகாசமாகப் படர்ந்திருக்கின்றன. மேற்கத்திய பாதிப்பில் சிக்கித் தவிக்கும் பாலிவுட்டிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான இந்தியக் கதை என்ற வகையில் இது அசலான ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!'

 இரு துருவம் 2
இரு துருவம் 2
OTT கார்னர்

இரு துருவம் 2 - Web Series

அடுத்தடுத்து காவல்துறையினர் படுகொலை செய்யப்படுகிறார்கள். காணாமல்போன மனைவியைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில் பணியிலிருந்து விலகியிருக்கும் இன்ஸ்பெக்டர் நந்தாவால்தான் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவரைக் கூப்பிடுகிறது காவல்துறை. நந்தா கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, கடத்தப்பட்ட அவர் மனைவி கிடைத்தாரா என்பதற்குப் பதில் சொல்கிறது சோனி லைவ்வில் அருண் பிரகாஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இரு துருவம் 2.’ முதல் சீசனில் ஒவ்வொரு கொலைக்குப் பின்னால் ஒரு திருக்குறள் இருக்கும். அந்தக் கொலையாளியை நந்தா சுட்டுக்கொன்ற பிறகும் அதேபோன்ற ‘திருக்குறள் கொலைகள்’ தொடர்வது எப்படி என்பதை த்ரில்லராகச் சொல்கிறார்கள். ஆனால், கொலைகளுக்கான பின்னணி அழுத்தமாக இல்லை. கடைசி எபிசோடு வரை பார்க்கவைக்க முயற்சி எடுத்த இயக்குநர், சுவாரஸ்யம், நெகிழ்ச்சி என உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மைனஸ். ‘இரு துருவம் 2’ கதை சொல்கிறது, ஆனால் அது எங்குமே நம்மை அசைத்துப் பார்க்கவில்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

We Have A Ghost - Movie

ஒரு சுமாரான ஹாலிவுட் ஹாரர் காமெடி படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அவையெல்லாம் அப்படி அப்படியே இந்த நெட்ப்ளிக்ஸ் படத்திலும் இருக்கின்றன. ஒரு பழங்கால வீட்டுக்குக் குடி வருகிறார்கள் ஆண்டனி மேக்கியின் குடும்பத்தினர். வீட்டுக்குள் ஓர் ஆவி உலவுவதைக் கண்டுபிடிக்கிறார் ஆண்டனியின் இளைய மகன். அதுவோ அப்பிராணி ஆவி. எனவே அந்த ஆவியை வைத்துக் காசு பார்க்க நினைக்கிறது ஆண்டனி அண்ட் கோ. இதனால் நடக்கும் களேபரங்கள்தான் கதை. புது அம்சங்கள் எதுவுமே இல்லாத இந்தக் கதையின் ஒரே ஆறுதல் ஆவியாய் வரும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' புகழ் டேவிட் ஹார்பரின் நடிப்புதான். ட்விஸ்ட் என்பதாக இயக்குநர் வைத்திருக்கும் க்ளைமாக்ஸும் எளிதாய் யூகிக்கக் கூடிய ரகம் என்பது சோகம். பிரபலமான நடிகர்கள் இருந்தால்போதும்... கதை, திரைக்கதைக்குப் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை என நினைத்துவிட்டார்கள்போல! ஞாயிறு மதியம் பார்க்கப் புதுப்படம் எதுவுமே இல்லையே என நினைப்பவர்கள் வேண்டுமானால் இதை முயற்சி செய்யலாம்.

Love at First Kiss
Love at First Kiss
OTT கார்னர்

Love at First Kiss - Movie

நாயகனிடம் ஒரு விநோத சக்தி இருக்கிறது. அவன் எந்தப் பெண்ணிற்கு முத்தம் கொடுத்தாலும் அவர்களின் காதல் உறவின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது அவனுக்குத் தெரிந்துவிடும். இதனால் எந்தப் பெண்ணையும் காதலிக்க முடியாமல் பிரேக் அப் செய்துகொண்டே இருக்கிறான். ஒரு சூழலில் நண்பனின் காதலிக்கு முத்தம் கொடுக்கையில் அவள்தான் தன் எதிர்காலம் என்று பல்ப் எரிகிறது. அடுத்தடுத்து வரும் சிக்கல்களைக் கடந்து இருவரும் ஒன்றுசேர முடிந்ததா என்பதுதான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் கதை. ‘முத்தம் கொடுத்தால் முன்கூட்டியே தெரிந்துவிடும்' என்ற சுவாரஸ்ய பேன்டஸி கருவைச் சுற்றியே நகர்கிறது திரைக்கதை. ஆனால், ‘சாகுற நாள் தெரிஞ்சுபோச்சுன்னா வாழுற நாள் நரகமாகிடும்' என்ற வசனம்போல, இதனால் பல அவஸ்தைகளைச் சந்திக்கிறான் நாயகன். அதைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் அல்வேரோ செர்வன்டிஸ். வாழ்க்கை தினமும் பல ஆச்சர்யங்களைத் தரக் காத்திருக்கிறது. அதை அதன் போக்கில் வாழ்வது நலம் என்ற மெசேஜையும் இந்தப் படம் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.