Published:Updated:

"தமிழ் சினிமாவில் இந்த சிஸ்டத்தை உடைக்க முடியும்!" - சுதா கொங்கரா பேட்டி

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

என் முதல் படமான 'துரோகி' ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே 'சூரரைப் போற்று' படத்துக்கான தொடக்கம் எனக்குள்ள ஆரம்பமாகிடுச்சு

" 'நான் ஆர்மில இருந்து வேலையை விட்டுட்டு வரும் போது என் கையில் 6000 ரூபாய்தான் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு நான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னப்போ எல்லாரும் சிரிச்சாங்க. ஆனால், அதை நான் செஞ்சு முடிச்சேன். யாரோட உதவியும் இல்லாமல், நம்ம கனவை நம்பி உழைச்சா அது நனவாகும்னு இன்றைய தலைமுறைக்குச் சொல்லுங்க'ன்னு ஜி.ஆர்.கோபிநாத் என்கிட்ட சொன்னார். அவர் சொன்னதை மனசுல வெச்சும், அவரோட வாழ்க்கையில இருந்து இன்ஸ்பயரான விஷயங்களை வெச்சும் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியிருக்கேன்" - நம்பிக்கையோடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் சுதா கொங்கரா.

"என் முதல் படமான 'துரோகி' ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே 'சூரரைப் போற்று' படத்துக்கான தொடக்கம் எனக்குள்ள ஆரம்பமாகிடுச்சு. 2010-ல ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான ஜி.ஆர்.கோபிநாத்தின் பேட்டியைப் பார்த்தேன். அதைப் பார்த்ததில் இருந்தே இவரோட கதையைப் படமாகப் பண்ணணும்னு தோணுச்சு. 'துரோகி' ரிலீஸானதும் இதைப் பண்ணலாம்னு நினைச்சப்போ, ஒரு படம்தான் பண்ணியிருக்கோம். நம்மை நம்பி எப்படி ஒருத்தரோட வாழ்க்கையைப் படமாக்குறதுக்கு ரைட்ஸ் கொடுப்பார், இன்னொரு படம் பண்ணலாம்னு 'இறுதிச்சுற்று' படத்துக்கான வேலையை ஆரம்பிச்சுட்டேன்.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

தமிழ் 'இறுதிச்சுற்று' ரிலீஸானதும் தெலுங்கு 'இறுதிச்சுற்று'க்கான வேலையும் வந்துடுச்சு. அந்த சமயத்தில்தான் ஒரு நாள் சூர்யாவை மீட் பண்ணினேன். நானும் சூர்யாவும் ரொம்ப வருஷமாகவே நல்ல நண்பர்கள். ஒவ்வொரு வருட ரக்‌ஷாபந்தனுக்கும் அவருக்கு ராக்கி கட்ட, அவர் வீட்டுக்குப் போவேன். அப்படிப் போன வருஷம் போனப்போ, 'என்ன படம் பண்ணிட்டு இருக்கே, எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லு'ன்னு சொன்னார். நான் ஏற்கெனவே அந்தப் பேட்டியைப் பார்த்ததுக்கு அப்புறம், அந்தக் கதை தொடர்பா பலபேரைச் சந்திச்சு, 44 பக்கத்துக்குச் சுருக்கமா எழுதியிருந்தேன். அதை அவர்கிட்ட கொடுத்து, 'இன்னும் நான் முழுசா எழுதி முடிக்கலை. இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க'ன்னு சொல்லிட்டு, தெலுங்குப் பட ஷூட்டிங் போயிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு, சூர்யாகிட்ட இருந்து பாசிட்டிவா பதில் வந்துச்சு. நானும் வேற படத்தோட ஷூட்டிங்கில இருந்தேன். சூர்யாவும் வேற வேற படங்களில் நடிச்சிட்டிருந்தார். ரெண்டு பேரும் அவங்க, அவங்க படங்களை முடிச்சுட்டு வந்ததும், 'சூரரைப் போற்று' படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்." விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2T86kIQ

நடிகர் மாதவன் இப்போ நம்பி நாராயணனின் பயோபிக்கை இயக்கியிருக்கார். அவருக்குள் ஒரு இயக்குநர் இருந்ததை எப்போதாவது நோட் பண்ணியிருக்கீங்களா?

''சத்தியமா இல்லை. அவன் அந்தப் படத்தை இயக்கப்போறான்னு தெரிஞ்சதும் எனக்கும், புஷ்கர் - காயத்ரிக்கும் செம ஷாக். 'மச்சான், எப்படிடா பண்ணுவான்'னு பேசிட்டிருந்தோம். ஏன்னா, அவன் ஒரு குழந்தை மாதிரி. ஒரு இடத்துல அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவனால உட்கார முடியாது. ஆனால், சீக்கிரமாகவே மூணு லாங்குவேஜோட ஷூட்டிங்கையும் முடிச்சிட்டான். படம் எப்படி வந்திருக்குன்னு பார்க்க செம ஆர்வமா இருக்கேன்."

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

ஆண் இயக்குநர்களை யாரும் ஆண் இயக்குநர்னு சொல்றதில்லை. ஆனால், சினிமாவில் இருக்கும் பெண் இயக்குநர்களை மட்டும் பிரித்துப் பார்ப்பதை எப்படிப் பார்க்குறீங்க. அது மாறணும்னா என்ன பண்ணணும்?

''ஒரு ஹீரோ ஆண் இயக்குநருக்கு எத்தனை நாள்கள் கால்ஷீட் கொடுப்பாரோ அதே அளவுக்குத்தான், எங்களுக்கும் கால்ஷீட் கொடுக்குறாங்க. ஒரு தயாரிப்பாளர் ஆண் இயக்குநருக்கு எத்தனை கோடி பட்ஜெட் கொடுப்பாரோ அதே அளவுக்குத்தான், எங்களுக்கும் கொடுக்குறாங்க. இங்கே எங்களுக்குன்னு எந்தச் சலுகையும் கொடுக்கிறதில்லை. அந்தச் சலுகைகள் எங்களுக்குத் தேவையும் இல்லை. அதனால, எல்லாரும் இயக்குநர்கள்தான். ஆண், பெண்ணுன்னு பிரிக்காதீங்க. அதிகமான பெண்கள் இயக்குநராகும்போதுதான், எங்களைப் பிரிச்சுப் பார்க்கிறது குறையும்னு நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தைப் பார்த்து பயந்துட்டு நிறைய பேர் உள்ள வர மாட்டேங்கிறாங்க. அவங்க எல்லாரும் சினிமாவுக்குள் வந்தால்தான், இந்த சிஸ்டத்தை உடைக்க முடியும்."

- 'சூரரைப் போற்று' உருவாக்கத்தில் உள்ள சுவாரசியங்களைப் பகிரும் இயக்குநர் சுதா கொங்கராவின் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > சூர்யா தயாரிப்பாளர் ஆன ரகசியம்! https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-director-sudha-kongara

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு