Published:Updated:

"நான் வந்தது அதிசயம்; ஆனா, அதான் பேரதிசயம்..!" இது 90's ரஜினி #VikatanOriginals

அதன்பின், கொஞ்சநேரம் ரஜினியோடு பேசிவிட்டு வந்துவிட்டேன். சத்தியமாகச் சொல் கிறேன்... அன்று நான் பார்த்த ரஜினி இத்தனை பெரிய நட்சத்திரமாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ( From Vikatan Archives )

கொள்ளை கொள்ளும் `ஸ்டைல்', சிலிர்க்கச்செய்யும் `மாஸ்', கைதட்ட வைக்கும் நடிப்பு... இன்றைக்கு திரையில் நமக்குத் தெரியும் ரஜினி இதுதான்.

அரிதாரம் பூசாத வார்த்தைகள், சக கலைஞர்களை வாழ்த்தி மெச்சும் குணம், ரசிகர்களைக் கட்டிப்போடும் மேடைப்பேச்சு, அவ்வப்போது துளிர்விடும் அரசியல் என நமக்கு திரைக்கு வெளியே தெரிந்த ரஜினி இதுதான்.

Rajinikanth
Rajinikanth
From Vikatan Archives

இவையெல்லாமே இன்றைக்கு ரஜினிகாந்தாக, தமிழ் சினிமாவின் 40 ஆண்டுகளுக்கும் மேலான தன்னந்தனி சூப்பர் ஸ்டாராக நமக்குத் தெரிந்த முகங்கள்... இந்த இரண்டுமற்று ரஜினிக்கு `சிவாஜி ராவ்' வாக இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த மூன்றாவது முகத்தை 90-களில் அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறார் விகடனின் நிருபர் பாலா.

7.12.1980 விகடன் இதழிலிருந்து அந்த `மூன்று முகம்' உங்களுக்காக இங்கே...

டைரக்டர் கே.பாலசந்தரைச் சந்திக்க முன்பு ஒருமுறை வாகினி ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் 'மூன்று முடிச்சு' படமெடுத்துக்கொண்டிருந்தார்.

செட்டில் ஓர் இளைஞர் தனியே நின்று கொண்டு, தானே நடித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். பாலசந்தர் அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி, ''இந்தப் பையன் பெயர் சிவாஜி ராவ். கொஞ்ச நாள் பொறுத்துப் பார்... இவன் பெரிய ஸ்டார் ஆயிடுவான்'' என்றார்.

`பாலசந்தரிடம் நடித்தவர்கள் யார் சோடை போயிருக்கிறார்கள்!' என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

எதிரே ஆர்ட் டைரக்டர் ராமசாமி வந்தார். ``அந்த சிவாஜிராவுக்கு இப்போ ரஜினிகாந்த்னு பேர். அடடா..! என்ன பிரமாதமா நடிக்கிறாரு! உடனே அவரைப் பேட்டி கண்டு எழுதுங்க. இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்!'' என்றார்.

அதன்பின், கொஞ்ச நேரம் ரஜினியோடு பேசிவிட்டு வந்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்... அன்று நான் பார்த்த ரஜினி இத்தனை பெரிய நட்சத்திரமாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ராக்கெட் வேகத்தில் முன்னேறிவிட்டார். டைரக்டர் பாலசந்தர், ஆர்ட் டைரக்டர் ராமசாமி இவர்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரையைக் கொட்ட வேண்டும்.

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: http://bit.ly/2RJQQKo

Rajinikanth
Rajinikanth
From Vikatan Archives

ரசிகர்களைக் கட்டிப்போடும் ரஜினியின் இன்றைய பேச்சுக்களைக் கேட்டிருப்போம். ஆனால், அப்போதே பேச்சில் சில `அதிசயங்களைக்' குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை நீங்களே படியுங்கள்...

4.11.1990 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றதுதான் மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன்பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

`என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண்போகாது'- `தர்பார்' இசை விழாவில் ரஜினி!

இவைதவிர,

  • 90-களில் மதுரையில் சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டிக்கதை

  • மீனாட்சியம்மன் கோயிலில் அர்ச்சனை செய்யும்போது நடந்த ஒரு சுவாரஸ்யம்...

போன்ற கூடுதல் தகவல்களுடன் முழு கட்டுரையைப் படிக்க: http://bit.ly/2RJQQKo